கரோனா உதவி - ரகுல் ப்ரீத்தின் புதிய யுக்தி.!

கரோனா உதவி - ரகுல் ப்ரீத்தின் புதிய யுக்தி.!

Update: 2020-04-09 12:29 GMT

தெலுங்கு திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக வலம் வருபவர் ரகுல் ப்ரீத் சிங். தமிழில் 'தடையற தாக்க', 'தீரன் அதிகாரம் ஒன்று' மற்றும் 'என்.ஜி.கே' படங்களில் நடித்துள்ளவருக்கு அடுத்த ஆண்டு இறுதி வரை படங்கள் ஒப்பந்தமாகியுள்ளன.

தற்போது ஊரடங்கு காரணமாக வீட்டில் இருப்பவர் தற்போதைய நேரத்தை நாட்டுக்குப் பயனுள்ளதாக மாற்ற புது யுக்தியை மேற் கொண்டுள்ளார். யூடியூபில் பிரத்தியேக சேனல் துவங்கியிருப்பவர் அதன் மூலம் வரவிருக்கும் அனைத்து வருவாயையும் பிரதமர் நிவாரண நிதிக்குத் தரவிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

Youtube Link : https://www.youtube.com/channel/UCtoaqVcJ_Q2xz04LlPAjHMQ 

Similar News