காசை கொடுத்து பெண்ணின் கருப்பையை விலை பேசுவதா.? அதிரடி சட்டத்தை கொண்டு வரும் பிரதமர் மோடி சர்கார் - மோசடி என்ற பேச்சுக்கே இடமில்லை!

காசை கொடுத்து பெண்ணின் கருப்பையை விலை பேசுவதா.? அதிரடி சட்டத்தை கொண்டு வரும் பிரதமர் மோடி சர்கார் - மோசடி என்ற பேச்சுக்கே இடமில்லை!

Update: 2019-11-26 12:52 GMT

வாடகை தாய் மூலம் குழந்தை பெற்று கொள்ளும் வழக்கம் இந்தியாவில் மிக பிரபலமாக இருக்கிறது. பல வெளிநாட்டினர் இது போன்று இந்தியாவிற்கு வந்து வாடகை தாய் மூலம் குழந்தை பெற்று கொள்கின்றனர். இந்த வழக்கம் 2002 வழக்கத்திற்கு வந்து சரியான முறையில் வரைமுறைப்படுத்தப்படாமல் இருக்கிறது.


இதன் படி ஒரு வாடகை தாய் ஒரு கருவை தன் கருப்பையில் சுமக்க அதற்கேற்ற பேருகாள வாடகையாக ஒரு தொகையை பெற்றுக்கொள்கிறார். இது பெரிய பணம் கொழிக்கும் ஒரு தொழிலாக மாறிவருவதால் மத்திய அரசு இதை நெறிமுறைப்படுத்து ஏற்கனவே இருந்த சட்டத்தில் சில திருத்தங்களை கொண்டு வர முயற்சிக்கிறது.
இந்த சட்ட திருத்தத்தின் படி வாடகை தாயாக இருக்க சம்மதிப்பவர்களுக்கு மருத்துவ உதவிகளும் மருத்துவ காப்பீடு வசதிகளும் செய்து தரப்படும் நேரடியாக பணம் கொடுத்து வாடகை தாயை அமர்த்தும் முறை தடை செய்யப்பட்டுள்ளது.


இதனால் இதை ஒரு வியபராமாக செய்து வருவது நிறுத்தப்படும். இப்பொது செய்துள்ள சட்ட திருத்தத்தின்படி வெளி நாட்டினர் இங்கு வந்து வாடகை தாய் முறையில் குழந்தை பெற்று கொள்வதற்கு நிறைய விதிமுறைகள் வகுக்கப்பட்டிருக்கின்றன . இந்தியாவில் உள்ளவர்களை பொறுத்த வரையில் வாடகை தாய் முறையில் குழந்தை பெற்றுக்கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்கள் உறவினர்களாக இருபவர்களையே வாடகை தாயக அமர்த்த முடியும். மேலும் வாடகை தாய் வேண்டுபவர்கள் திருமணமானவர்களாக குறைந்த பட்சம் 5 வருட திருமண வாழ்வை முடித்திருக்க வேண்டும். அவர்கள் குழந்தை இல்லாத காரணத்திற்காக சான்றிதழை மருத்துவரிடம் பெற்றிருக்க வேண்டும்.


குறிப்பிட்ட வயது வரம்பை ஆன் பெண் இருவரும் பூர்த்தி செய்திருக்க வேண்டும். மேலும் வாடகை தாயக இருக்க முன்வருபவர்களுக்கும் சில நிபந்தனைகள் உள்ளன, அவர்கள் 25-35 வயது வரை இருக்க வேண்டும், இதற்கு முன்னதாக இது போன்ற குழந்தை பெற்றிருக்க கூடாது, அவர்கள் உடல் தொகுதிக்கான மருத்துவ சான்றிதல் பெற்றிருக்க வேண்டும்.
மேலும் வாடகை தாய் மூலம் பிறக்கும் குழந்தை எல்லாவகையிலும் அதை சுவீகரித்து கொள்ளும் பெற்றோரின் ரத்த வலி வாரிசுகளாகவும் அதற்கான எல்ல உரிமைகளையும் பெற்றதாகவே இருக்கும். iஇந்த மசோதா சட்டமாக நிறைவேறினால் வரைமுரையாற்று நடக்கும் இந்த வழக்கம் நெறிமுறைப்படும்.


Similar News