தாயை கொடூரமாக கொலை செய்த பள்ளி மாணவன் - கஞ்சா போதை காரணமா?
பள்ளி மாணவன் ஒருவன் தன் தாயை கொலை செய்த சம்பவம் சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளி மாணவன் ஒருவன் தன் தாயை கொலை செய்த சம்பவம் சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சத்தியமங்கலம் அருகே சரியாக படிக்காமல் இருந்ததை கண்டித்த தாயின் தலையில் கல்லை போட்டு 14 வயது மாணவன் கொன்றுள்ளான் இதனை போலீசார் விசாரித்து வருகின்றனர். சுங்கக்காரன் பாளையத்தை சேர்ந்த அருள்செல்வனின் மனைவி யுவராணி ஒன்பதாம் வகுப்பு படிக்கும் இவர்களது மகன் சஞ்சய் சரியாக படிக்காததால் அவரை தனியார் பள்ளி ஹாஸ்டலில் சேர்த்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக வீட்டிற்கு வந்திருந்த சஞ்சய் சரியாக படிக்கவில்லை என திட்டியதால் கோபமாக இருந்துள்ளான். நேற்று இரவு அருட்செல்வன் வெளியில் சென்று இருந்த நிலையில் யுவராணி சஞ்சய் மற்றும் 12 வயதான மகள் தர்ஷினி தூங்கிக் கொண்டிருந்தனர் கோபத்தில் இருந்த சஞ்சய் நள்ளிரவில் ஹாலோ பிளாக் கல் எடுத்து தாய் யுவராணியின் தலை மேல் போட்டு தப்பியுள்ளார்.
யுவராணி துடிதவித்து இறந்த நிலையில் அக்கம் பக்கத்தினர் போலீசுக்கு தகவல் அளித்தனர் போலீசார் சஞ்சய்யை பிடித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர் மேலும் இதன் பின்னணியில் கஞ்சா போதை உள்ளதா எனவும் விசாரித்து வருகின்றனர்.