மதச்சார்பின்மை பேசுறாங்களாம் - கம்யூனிஸ்ட்டுகளின் கேரளாவில் என்ன நடந்திருக்கு பாருங்க : இதெற்கெல்லாம் ஊடகங்கள் பொங்க மாட்டாங்களா.?

மதச்சார்பின்மை பேசுறாங்களாம் - கம்யூனிஸ்ட்டுகளின் கேரளாவில் என்ன நடந்திருக்கு பாருங்க : இதெற்கெல்லாம் ஊடகங்கள் பொங்க மாட்டாங்களா.?

Update: 2019-11-29 07:50 GMT

திருவள்ளுவரை காவி நிற உடையில் போட்டோ வெளியிட்டதுக்கு குய்யோ! முய்யோ! என்று குதித்த திமுக, கம்யூனிஸ்ட்டுகள் கண்ணில் இதெல்லாம் படுமா என்று தெரியவில்லை.


இந்தியா மதசார்பின்மை கொண்ட நாடு என்றாலும், சமீப காலமாக இந்து மதத்தை குறி வைத்து மட்டுமே தாக்குதல் நடந்து வருகிறது. கிறிஸ்தவ கல்லூரியில் பணிக்கு கிறிஸ்தவர்கள் தான் விண்ணபிக்க வேண்டும் என்றால், பொட்டிப்பாம்பாக அடங்கி இருக்கும் ஊடகங்கள், இந்து கல்லூரி ஒன்று இந்துக்கள் தான் விண்ணபிக்க வேண்டும் என்று சொன்னால், தேசிய அளவில் ஊடகங்களில் விவாத பொருள் ஆகும் அளவுக்கு ஊதி பெரிது படுத்துவார்கள். மற்ற மதத்தினர் கோவிலை ஆக்கிரமித்து கட்டுமானங்கள் மேற்கொண்டால், இருக்கிற இடம் தெரியாமல் இருப்பார்கள். தமக்கு சொந்தமான கோவில் இடத்தில் இந்துக்கள் கோவில் கட்ட முயற்சி செய்தால், அதனை எதிர்த்து வழக்கு போடுவார்கள். மாதச்சார்பின்மை என்ற பெயரை மட்டும் வைத்துக்கொண்டு இத்தனை அட்டூழியங்கள் அரங்கேறி வருகிறது.


அந்த வகையில் கேரளாவில் இடம்பெற்ற ஒரு சம்பவம் மேலும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. மசூதிக்கு முன்னால் குழந்தைகள் கொடியை கையில் பிடித்துக்கொண்டு நிற்கின்றனர். சிறிது நேரத்தில் இந்திய தேசிய கீதம் போல ஒரு பாடல் பாடப்படுகிறது. ராகத்தை கேட்டவுடன் தேசிய கீதம் தான் என்று நினைத்து பலரும் ஏமாந்து விடுவார்கள். திரும்ப உன்னிப்பாக கேட்டால் தான் தெரியும், தேசிய கீதத்தையே திரித்து அவர்கள் மத பாடலாக மாற்றியுள்ளார்கள் என்று. ஒரு உடையின் நிறத்தை மாற்றியதற்கு அப்படி கூச்சலிட்ட மதச்சார்பின்மை மைந்தர்கள் இதனை எதிர்த்து ஒரு கேள்வி கூட கேட்க மாட்டார்களா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இவர்களின் மதச்சார்பின்மை கொள்கை இந்துக்களை எதிர்க்க மாட்டும் தானா.? எதனை நோக்கி அவர்கள் கொள்கை நகர்கிறது என்பதே விளக்கவில்லை.




https://twitter.com/KovaiSathyan/status/1200302710202912768

Similar News