#காமப்பேரரசு வைரமுத்துவின் பாடல் திருட்டு அம்பலங்கள்! இளம் கவிஞனின் பாடலை திருடி, தனது பெயரை போட்டு அதற்கான விருதுகளையும் வெட்கமின்றி பெற்றுக் கொண்டு சிலாகித்த #மானம்கெட்டவைரமுத்து ?

#காமப்பேரரசு வைரமுத்துவின் பாடல் திருட்டு அம்பலங்கள்! இளம் கவிஞனின் பாடலை திருடி, தனது பெயரை போட்டு அதற்கான விருதுகளையும் வெட்கமின்றி பெற்றுக் கொண்டு சிலாகித்த #மானம்கெட்டவைரமுத்து ?

Update: 2019-01-19 04:36 GMT
சர்ச்சைகளின் மறு உருவம் வைரமுத்து என்று கூறும் அளவிற்கு தரம்கெட்டு செல்கிறது வைரமுத்துவின் வாழ்க்கை.
பள்ளி, கல்லூரிகளுக்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டால் தனது புத்தகத்தை லட்சக்கணக்கில் பணம் கொடுத்து வாங்க வேண்டும் என்று கொடுமைப் படுத்தும் வைரமுத்து, கடந்த மூன்று மாதங்களாக தனது காம பசிக்கு இறையாக்கியவர்களால் பழிதீர்க்கப்பட்டு வந்தார். இந்த சர்ச்சைகள் அடங்குவதற்கும் அடுத்து பாடல் திருட்டு சர்ச்சைகளில் சிக்கியுள்ளார் #காமப்பேரரசு வைரமுத்து.
2011-ஆம் ஆண்டில் வெளியான வாகை சூட வா படத்தின் வெற்றிக்கு அதன் பாடல்களும் இசையும் ஒரு முக்கிய காரணம், இசையமைப்பாளர் ஜிப்ரானுக்கு இந்த படம் முதல் படம். படத்தின் பாடல்களை வைரமுத்துவும், கார்த்திக் நேதாவும் எழுதியிருந்தார்கள். இதில் வைரமுத்து எழுதியதாக வெளியான "சரசர சார காத்து வீசும் போது" பாடல் பிலிம்பேர்(Filmfare) மற்றும் விஜய் டிவி விருதுகள் உட்பட பல விருதுகளையும், உயரிய அங்கீகாரங்களையும் அவருக்கு பெற்று தந்தது. இந்த விருதுகள் வாங்கும் தருணங்களில் பல மேடைகளில் வைரமுத்து இப்படி சொல்லி வந்தார்.
"இயக்குனர் சற்குணம் என்னிடத்தில் ஒரு காட்சியை கூறினார். படிக்காத ஒரு கிராமத்து தேநீர் கடைக்காரி, அங்கு பணிக்காக வரும் ஒரு ஆசிரியரிடம் மையல் கொள்கிறாள், அவள் அவரை சார் சார் என அழைப்பது தான் வழக்கம், இந்த வார்த்தையை கொண்டு அவள் காதலை வெளிப்படுத்துவது போல ஒரு பாடல் வரைய முடியுமா என கேட்டார். ஒரு வினாடி தான். சரசர சார காத்து வீசும் போதும் சார பாத்து பேசும் போதும் சார பாம்பு போல மனசு சத்தம் போடுதே என எழுதி கொடுத்து விட்டு இப்படி சொன்னேன். நீ கேட்டது ஒரு சார், நான் கொடுத்தது மூன்று சார், போதுமா என்றேன்."
இதே படத்தில் இன்னொரு பாடலாசிரியர் கார்த்திக் நேதாவிற்கு இது முதல் படம், "போறானே ..போறானே பாடலுக்கு மட்டும் இவருக்கான க்ரெடிட் தரப்பட்டது. இப்போது, 2018-ஆம் ஆண்டின் மிகச்சிறந்த பாடலாசிருக்கான விருதை கார்த்திக் நேதா 96 படத்துக்காக பெற்றிருக்கிறார். அது தொடர்பான பேட்டியில் சரசர சார காத்து பாடலையும் தான் தான் எழுதியதாகவும், அதன் வரிகளை மட்டும் மேலும் கீழுமாக மாற்றி தனது பெயரில் வெளியிட செய்தார் வைரமுத்து என்று கூறியுள்ளார்.
"தம்பி நீங்க எழுதினது தான், ஆனா சார் கொஞ்சம் சேஞ் பண்ணி அவர் பேர் போட சொல்லிட்டார், சாரி தம்பி என தயாரிப்பாளர் அழைத்து வருத்தம் தெரிவித்ததாக கூறும் கார்த்திக், இசையமைப்பாளர் ஜிப்ரானுக்கு இந்த திருட்டு தெரியாதா என்ற கேள்விக்கு, தெரியும், ஆனால் அது அவரது முதல் படம், அவரால் எதுவும் சொல்ல முடியவில்லை என கூறியுள்ளார்.
பொங்கல் சிறப்பு நிகழ்ச்சி ஒன்றுக்குப் பேட்டி அளித்த கார்த்திக் நேதா அப்பேட்டியில் வைரமுத்துவின் பெயரை நேரடியாகக் குறிப்பிடாமல் தமிழகத்தின் பெரும் கவிஞர் அவர். அக்கவிஞர் மீது எனக்குப் பெரும் காதலே இருந்தது. "வாகை சூடவா" பாடலுக்கு முதலில் என்னை டிராக் எழுதச்சொல்லி தான் இயக்குநர் அழைத்தார். ஆடியோ ரிலீஸுக்குப் பின்னர்தான் என் பாடலை ஒன்றிரண்டு வரிகள் மாற்றி வைரமுத்து தன் பெயரைப் போட்டுக்கொண்டார் என்பது எனக்கு தெரியும்.
இசையமைப்பாளர் ஜிப்ரானுக்கு அது முதல் படம் என்பதால் வைரமுத்துவை மீறி அவரால் ஒன்றும் செய்யமுடியவில்லை. ஆனால் வைரமுத்துவின் செயலுக்கு தானும் மறைமுகமாக துணைபோகிறோமே என்ற குற்ற உணர்ச்சி அவருக்கு இருந்தது. அதனால் அந்தப்படத்திலேயே ஒரு பாடலுக்கு வாய்ப்பளித்த அவர், அடுத்து தான் இசையமைக்கும் எல்லாப் படங்களுக்குமே பாடல் எழுத அழைத்திருக்கிறார்" என்றார் கார்த்திக்.
நிகழ்ச்சியின் இறுதிப்பகுதியில் நீங்கள் குறிப்பிட்ட கவிஞர் வைரமுத்துதானே என்ற கேள்விக்கு ஆமாம் சொல்லும் கார்த்திக் "அந்த ஆளு பெயரை நான் சொன்னதா போட்டுராதீங்க. அப்புறம் அந்த ஆளு என்னை அழிச்சுருவாரு" என்றும் பயந்தபடியே சொல்கிறார்.
கற்பழிப்பு புகார்களில் கையும் களவுமாக பிடிபட்ட பிறகும் மீசையில் மண்ணு ஒட்டாதது போல் சமாளித்து வரும் வைரமுத்து பாடல் திருட்டு குற்றச்சாட்டையும் ஒப்புக்கொள்ளப் போகிறாரா என்ன? மானம் கெட்ட வைரமுத்து என்று சமூக ஊடகங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் எழுதி வருவது உண்மை தான் போல?
Input Credits - Asianet Tamil

Similar News