குர்ஆனை 24 மணி நேரத்தில் கையால் எழுதி உலக சாதனை படைத்த மாணவிகள்!

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த கோவிலாச்சேரியில் உள்ள ஒரு கலை கல்லூரியில் குர்ஆனை கையால் எழுதும் போட்டி நடைபெற்றது.

Update: 2023-11-05 10:00 GMT

அறிவியல் தொழில்நுட்பம் வளர்ந்து பிரிண்டர்கள் கண்டுபிடிப்பதற்கு முன்னர் வரைக்கும் அனைத்து மத நூல்களும் கையெழுத்து பிரதிகளாகவே இருந்தன.அவை பல்வேறு அருங்காட்சியகங்களில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அறிவியல் தொழில்நுட்பம் வளர்ந்த பிறகு அனைத்தும் அச்சு பிரதிகளாக வெளியிடப்பட்டது.

அப்படி இருக்கும் பொழுது சமீபத்தில் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த கோவிலாச்சேரி பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார் கலைக் கல்லூரியில் படிக்கும் மாணவிகள் 24 மணி நேரத்தில் குர்ஆனை கையால் எழுதி உலக சாதனை படைத்துள்ளனர். அரபு மொழியில் அழகாக எழுதும் இருவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். அவர்களில் ஒருவர் குரானை சொல்ல மற்றவர் எழுத 24 மணி நேரத்தில் குர்ஆனின் 6666 வசனங்களையும் 612 பக்கங்களில் எழுதி முடித்து சாதனை படைத்துள்ளனர்.

Similar News