44 கடற்கொள்ளை முயற்சிகளை இந்திய கடற்படை தடுத்துள்ளது - இந்தியா பெருமிதம்

44 கடற்கொள்ளை முயற்சிகளை இந்திய கடற்படை தடுத்துள்ளது - இந்தியா பெருமிதம்

Update: 2018-12-04 19:22 GMT

இந்திய கடற்படை தினம்  கொண்டாடப்பட்டது. முன்னதாக அது தொடர்பான நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இந்திய கடற்படை தளபதி சுனில் லன்பா கலந்து கொண்டார்.


அப்போது அவர் பேசுகையில், ஏடன் வளைகுடா பகுதியில் கடற்கொள்ளையை தடுத்து, சர்வதேச நாடுகளின் அச்சத்தை களைய இந்திய கடற்படை தொடர்ந்து பணியாற்றி வருகிறது. கடந்த 2008-ம் ஆண்டு முதல் இந்திய போர்க்கப்பல்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 44 கடற்கொள்ளை முயற்சிகளை தடுத்து, 120 கடற்கொள்ளையர்களை இந்திய கடற்படை கைது செய்துள்ளது. கடற்படையில் பெண் அதிகாரிகள் பணிபுரிந்து வருகிறார்கள். விக்ரமாதித்யா போன்ற, கப்பல்களில் பெண் அதிகாரிகளுக்கு போதுமான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் கப்பல்களில் பணிபுரியும் பெண் அதிகாரிகளுக்கு இடவசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கப்படும். பெண் அதிகாரிகளின் குடும்பத்தாரிடம் நாங்கள் எப்போதும் தொடர்பில் உள்ளோம். அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குகிறோம்.
அமெரிக்காவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஜான் ஆலென் சாவ். இவர் அந்தமான் தீவை சுற்றிப் பார்க்க வந்துள்ளார். அந்தமானில் வசிக்கும் பழங்குடியின மக்கள் பற்றி கேள்விப்பட்டு அங்குள்ள வடக்கு சென்டினல் தீவுக்கு உள்ளூர் மீனவர்கள் மூலம் படகில் சென்றுள்ளார்.
வடக்கு சென்டினல் தீவில் சென்டினல் பழங்குடியின மக்கள் வசிக்கின்றனர். இவர்கள் வெளியுலகத்துடன் தொடர்பு இல்லாதவர்கள். அந்நியர்கள் வந்தால் அவர்களை இந்த பழங்குடியினர் தாக்குவார்கள். அந்த பகுதிக்கு செல்ல அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில், தடையை மீறி ரகசியமாக வடக்கு சென்டினல் தீவுக்குச் சென்ற அமெரிக்கர் ஜான் ஆலெனை பழங்குடியின மக்கள் கொன்றனர். இது  கடலோர பாதுகாப்பு கட்டமைப்பின் தோல்வி என்று நான் பார்க்கவில்லை. அவர் அந்தமான் தீவிற்கு சுற்றுலா பயணியாகத்தான் வந்தார், அந்தமான்&நிக்கோபார் தீவின் அதிகாரிகள் அவரை தீவிர விசாரணைக்கு பிறகு தான் அனுமதிக்கப்பட்டார்' இவ்வாறு அவர் கூறினார்.

Similar News