வாஷிங்டனில் சர்வதேச விருதை வென்று கவனம் ஈர்த்த தமிழக பா.ஜ.க நிர்வாகி - குவியும் பாராட்டுக்கள்

வாஷிங்டன் நகரில் புகழ்பெற்ற சாதனையாளர்களுக்கான விருதை தமிழக பா.ஜ.க'வை சேர்ந்தவர் கைப்பற்றி சாதனை படைத்துள்ளார்.

Update: 2023-01-05 10:02 GMT

வாஷிங்டன் நகரில் புகழ்பெற்ற சாதனையாளர்களுக்கான விருதை தமிழக பா.ஜ.க'வை சேர்ந்தவர் கைப்பற்றி சாதனை படைத்துள்ளார்.


 



பா.ஜ.க'வின் வெளிநாட்டு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவு மாநில துணை தலைவர் ஆனந்தன், தென்காசி மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் நகரில் உள்ள 'குளோபல் ஹை மேகசின்' நிறுவனம் நடத்தும் ஜி.எஸ்.ஏ இந்தியா @ 75 என்ற நிகழ்ச்சியில் உலகெங்கிலும் புகழ்பெற்ற சாதனையாளர்களுக்கான விருதை வென்று கவனத்தை ஈர்த்துள்ளார்.




 

இந்த விருதானது உலகெங்கிலும் உள்ள சிறந்த சாதனையாளர்களை கண்டுபிடித்து அவர்களை கௌரவிப்பது ஆகும், இந்தியாவிலிருந்து குறிப்பாக நம் தமிழகத்திலிருந்து சென்று இந்த விருதை வாங்கியவர் என்ற முறையில் தமிழகத்திற்கும், இந்தியாவிற்கும் இவர் பெருமை சேர்த்துள்ளார். மேலும் இவர் பா.ஜ.க'வின் வெளிநாட்டு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவு மாநில துணை தலைவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Similar News