தமிழகத்தை சேர்ந்தவர்கள் புதுச்சேரிக்குள் நுழைந்தால் கடுமையான நடவடிக்கை - முதலமைச்சர் நாராயணசாமி எச்சரிக்கை.!

தமிழகத்தை சேர்ந்தவர்கள் புதுச்சேரிக்குள் நுழைந்தால் கடுமையான நடவடிக்கை - முதலமைச்சர் நாராயணசாமி எச்சரிக்கை.!

Update: 2020-04-10 04:19 GMT

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி சட்டப்பேரவையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், புதுச்சேரி மாநிலத்தில் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த அனைவரின் ரத்த மாதிரி ஆய்வு செய்ததில் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என தெரியவந்துள்ளதாக தெரிவித்தார்.

மேலும் நாட்டில் கொரோனா தொற்று பாதித்த மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் இரண்டாவது இடத்தில் இருக்கும் நிலையில் புதுச்சேரி அருகாமையில் உள்ள தமிழக பகுதியான கடலூர் மற்றும் விழுப்புரம் பகுதிகளில் இருந்து புதுச்சேரிக்குள் வராமல் இருக்க போலீசார் தீவிரமாக கண்காணிக்கவும், மீறி வந்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கையும் எடுக்க காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் ஊரடங்கு உத்தரவை புதுச்சேரி மாநில மக்கள் முழுமையாக கடைடித்து வருகின்றனர் என்றும், இதனை வரும் 14-ஆம் தேதி வரை கடைபிடிக்க வேண்டுமெனவும் மக்களிடம் கேட்டுக்கொண்டார். இதேபோல் கொரோனா தொற்று அதிகம் பரவ வாய்ப்பு உள்ளதால் பொது மக்கள் முகக்கவசம் அணியாமல் வெளியே போக வேண்டாம் எனவும் அறிவுறுத்தினார்.

Similar News