தொலைதூர கல்வி பட்டம் நேரடி வகுப்பு பட்டத்திற்கு இணையானது பல்கலைக்கழக மானியக்குழு உறுதி

அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களிடமிருந்து பெறப்படும் தொலைதூர கல்வி பட்டம் நேரடி வகுப்பு பட்டத்துக்கு இணையானது என்று பல்கலைக்கழக மானிய குழு உறுதி அளித்துள்ளது

Update: 2022-09-10 06:30 GMT

அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களிடமிருந்து தொலைதூர கல்விமுறை மற்றும் ஆன்லைன் கற்றல் முறையில் பெறப்படும் பட்டங்கள் நேரடி வகுப்புகள் மூலம் பெறப்படும் பட்டங்களுக்கு இணையானவை என பல்கலைக்கழகம் மானியக் குழு தெரிவித்துள்ளது.


இது தொடர்பாக யு.ஜி.சி வெளியிட்டுள்ள அறிக்கையில் உயர்கல்வி நிறுவனங்களில் இருந்து திறந்த நிலை ,தொலைதூர கல்விமுறை மற்றும் ஆன்லைன் கற்றல் மூலம் பெறப்படும் இளங்கலை, முதுகலை பட்டங்கள், முதுகலை பட்டய படிப்பு, சான்றிதழ்கள் அனைத்தும் வழக்கமான முறையில் வழங்கப்படும் பட்டங்கள் மற்றும் முதுகலை பட்டைய படிப்புகளுக்கு சமமாக கருதப்படும் என்று கூறப்பட்டுள்ளது.


பல்கலைக்கழக மானியக்குழு( திறந்த மற்றும் தொலைதூர கற்றல் திட்டங்கள் மற்றும் ஆன்லைன் நிகழ்ச்சிகள்) விதிமுறைகளின் 22 -வது விதியின்படி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.





 


Similar News