திரைப்பட இயக்குனர் மணிரத்னம் மீது தேச துரோக வழக்கு பாய்ந்தது!!

திரைப்பட இயக்குனர் மணிரத்னம் மீது தேச துரோக வழக்கு பாய்ந்தது!!

Update: 2019-10-04 07:21 GMT


இயக்குனர் மணிரத்னம், ஹிந்தி பட இயக்குனர் அனுராக் காஷ்யப், உள்பட 49 நபர்கள் மீது தேச துரோக வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது. இந்த 49 நபர்கள் "ஜெய் ஸ்ரீ ராம் " என்ற கோஷம் ஒரு போர் முழக்கம் என்றும், இதை கூறி உத்தர பிரதேசம், பீகார் மற்றும் மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் சிறுபான்மை மக்கள் தாக்கப்படுகின்றனர் என்று பிரதமருக்கு சில மாதங்களுக்கு முன் கடிதம் எழுதினர்.


இந்த கடிதம் சம்மந்தமாக இரண்டு மாதங்களுக்கு முன் மிஜாப்பூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர்புகார் மனு அளித்தார். அதை விசாரித்த மிஜாப்பூர் தலைமை நீதிபதி சூர்யா காந்த் திவாரி அந்த புகார் மனுவை ஏற்று மணிரத்னம் உள்ளிட்ட 49 பேர் மீது வழக்குப் பதிவு செய்யுமாறு நேற்று உத்தரவிட்டார். இதனால், பீகாரில் உள்ள சர்தார் காவல் நிலையத்தில் மணிரத்னம் உள்பட 49 பேர் மீதும் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.


தேவையில்லாமல் "ஜெய் ஸ்ரீ ராம் " என்ற கோஷத்தை போர் முழக்கம் என்று இந்து மதத்திற்கு எதிராக கூறுவது பல இந்துக்களை காய படுத்தியது. இந்துக்களுக்கும் முஸ்லிமிகளுக்கும் இடையூறு உருவாக்குவதற்காக இந்த கடிதத்தை எழுதியுள்ளதாக பலர் இதை எடுத்துக்கொண்டனர்.


நீதிமன்றத்தின் உத்தரவு படி, இந்த 49 பேர் மீது தேச துராக செயலில் ஈடுபட்டதற்காகவும், பிரதமரின் மரியாதைக்கு இழிவு வரும் படி நடந்து கொண்டதற்காகவும், பிரிவினையை மறைமுகமாக ஊக்கப்படுத்துவதற்காகவும் குற்றச்சாட்டுகள் பதியப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டுகள் அடிப்படையில், தேசதுராக வழக்கு, பொது நலத்துக்குக் இடையூறு தரும் வகையில் நடந்துகொண்டது, மத உணர்வைக் காயப்படுத்தியதுஎனப் பல பிரிவுகளின் கீழ் மணிரத்னம் உள்பட 49 நபர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.


Similar News