'மாமன்னன்' படத்துக்கு தடை கேட்ட வழக்கில் உதயநிதி ஸ்டாலின் பதில் அளிக்க வேண்டும் - ஐகோர்ட் உத்தரவு!
'மாமன்னன்' படத்துக்கு தடை கேட்கும் வழக்கிற்கு உதயநிதி ஸ்டாலின் பதில் அளிக்க வேண்டும் என்று ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
ஓ.எஸ்.டி பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ராம சரவணன். இவர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாயகனாகவும் கதாநாயகிகளாக நடிகைகள் ஆனந்தி பாயல்,ராஜ்புத் உட்பட பலர் நடிப்பில் 'ஏஞ்சல்' என்ற திரைப்படத்தை தயாரித்தேன்.இந்த படத்தின் 80 சதவீதம் படப்பிடிப்பு முடிந்து விட்டது.
20% படிப்பிடிப்பு நடத்த வேண்டிய நிலையில் 'ஏஞ்சல்' படத்தில் நடிக்காமல் 'மாமன்னர்' பட வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். ஏற்கனவே ஏஞ்சல் படத்தில் நடித்து முடிக்காமல் 'மாமன்னர்' படத்தை வெளியிட அனுமதித்தால் அது எனக்கு மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தும். எனவே 'ஏஞ்சல்' படத்தில் நடித்து கொடுக்க உதயநிதி ஸ்டாலினுக்கு உத்தரவிட வேண்டும். அதுவரை மாமன்னன் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி கே. குமரேஷ்பாபு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது உதயநிதி ஸ்டாலின் அவரது ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கேட்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி விசாரணையை வருகிற 28ஆம் தேதிக்கு பதில் அளிக்க உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்திற்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தார்.