படுக்கை வசதியுடன் தயாராகும் வந்தே பாரத் ரயில் - அடுத்த ஆண்டு முதல் பயன்பாடு!

படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரயில் அடுத்த ஆண்டு முதல் பயன்பாட்டுக்கு வருகிறது.

Update: 2023-10-05 05:00 GMT

சென்னை பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பெட்டிகள் தயார் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஐ.சி.எஃப் -ல் தயாரிக்கப்பட்ட முதல் வந்தே பாரத் ரயில் சேவை டெல்லி வாரணாசி இடையே கடந்த 2019 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். அதிவேக பயணம் சொகுசான இருக்கைகள் ஏ.சி வசதி என பல்வேறு வசதிகள் இருப்பதால் வந்தே பாரத் ரயில் சேவைக்கு பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

தற்போது நாடு முழுவதும் இருக்கை வசதிகள் கொண்ட 33 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன . இதில் தெற்கு ரயில்வேயில் சென்னை மைசூர் , சென்னை - கோவை, திருவனந்தபுரம்- காசர்கோடு, சென்னை- நெல்லை இடையே வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த நிலையில் படுக்கை வசதிகள் கொண்ட வந்தே வாரத் ரயில்களை இயக்க வேண்டும் என பயணிகள் தரப்பிலிருந்து கோரிக்கை எழுந்து வந்தது. இதனால் படுக்க வசதிகளை கொண்ட வந்தே பாரத் ரயில் பெட்டிகளின் மாதிரி வரைபடத்தை ரயில்வே வடிவமைத்து வந்தது.

தற்போது படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் பெட்டிகளின் வரைபடம் இறுதி செய்யப்பட்டு உள்ளது. அந்த படத்தை மத்திய ரயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவி தனது எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். ஐ.சி.எஃப்-ல் ரயில் பெட்டிகள் தயாரிப்பு பணியும் கூடிய விரைவில் தொடங்கப்பட உள்ளது. 2024-ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் படுக்க வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரயில் சேவையை இயக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

SOURCE :DAILY THANTHI

Similar News