மொத்த மனித குலத்துக்கும் வழிகாட்டும் சந்திரயானின் வெற்றி - பிரதமர் மோடி உற்சாக உரை!
சந்திரயானின் வெற்றி குறித்து பிரதமர் மோடி உற்சாக உரையில் ஒட்டுமொத்த மனித குலத்துக்குமே வழிகாட்டுவதாக உள்ளது என்று கூறியுள்ளார்.
நிலவின் தென் துருவத்தில் தரை இறங்கி ஆய்வு செய்வதற்காக சந்திராயன்-3 விண்கலத்தை இஸ்ரோ கடந்த 14 - ஆம் தேதி விண்ணில் செலுத்தியது. வெற்றிகரமாக செலுத்தப்பட்ட இந்த விண்கலத்துக்காக பல்வேறு உலக நாடுகள் இந்தியாவை பாராட்டி வருகின்றன. அந்த வகையில் பூட்டான் பிரதமர் லோட்டே ஷெரிங் வாழ்த்து தெரிவித்திருந்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில் வீட்டில் உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி. உண்மையில் சந்திரன் வெற்றி ஒட்டுமொத்த மனித குலத்துக்கும் நல்வழி காட்டுவதாக உள்ளது என குறிப்பிட்டு இருந்தார்.
இதற்கிடையே பிரதமர் மோடியின் பிரான்ஸ் பயணம் தொடர்பாக அந்த நாட்டு அதிபர் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதற்கு பதில் அளிக்க பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில் இந்தியா பிரான்சுக்கு இடையேயான காலத்தை கடந்த ஒரு பந்தம் நமது பகிரப்பட்ட மதிப்புகளில் எதிரொளித்து நமது கூட்டு கனவுகளை தூண்டுகிறது. எனது சமீபத்திய பிரான்ஸ் பயணத்துக்காக நான் எப்போதும் மகிழ்வேன் எனது நண்பர் அதிபர் மேக்ரானுக்கு நன்றி என்று பாராட்டியிருந்தார்.
SOURCE :DAILY THANTHI