சுப்ரீம் கோர்ட்டுக்கு கர்நாடகா சபாநாயகர் சவால் விடுகிறாரா? - நீதிபதிகள் கேள்வி !!

சுப்ரீம் கோர்ட்டுக்கு கர்நாடகா சபாநாயகர் சவால் விடுகிறாரா? - நீதிபதிகள் கேள்வி !!

Update: 2019-07-12 07:29 GMT


உச்ச நீதிமன்றத்திற்கு கர்நாடக சபாநாயகர், சவால் விடுகிறாரா? என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.


மேலும், கர்நாடக அரசியல் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிடக் கூடாது என்று சபாநாயகர் கருதுகிறாரா? என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.


கர்நாடக எம்எல்ஏக்களின் ராஜினாமா கடிதங்கள் மீது உடனடியாக முடிவெடுக்கும்படி உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்ட நிலையில் கர்நாடக சபாநாயகர், ரமேஷ் குமார் சார்பில் உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. 


காங்கிரஸ் மூத்த தலைவரும், மூத்த வக்கீலுமான அபிஷேக் மனு சிங்வி இந்த மனுவை தாக்கல் செய்தார். இந்த மனுவில், எம்எல்ஏக்களின் ராஜிநாமா கடிதம் மீது ஒரே நாளில் நடவடிக்கையை அறிவிக்க வேண்டும் என்ற உத்தரவை மாற்ற வேண்டும் என்றும், அவைத் தலைவருக்கு நீதிமன்றங்கள் அறிவுறத்த முடியாது என்றம் கூறப்பட்டிருந்தது. இதனைப் பரிசீலித்த நீதிபதிகள், அதிருப்தி எம்எல்ஏக்கள் மனு வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வரும்போது, இந்த மனுவும் விசாரிக்கப்படும் என்று கூறிவிட்டனர்.


இந்த மனு மீதான விசாரணை இன்று நடந்தது. அப்போது, மேற்கண்ட கேள்விகளை நீதிபதிகள் எழுப்பினார்கள்.


Similar News