'ஏதே 2 ரூபாய் அதிகம் தரணுமா?' - டீக்கடையை அடித்து உடைத்த ஆளும் கட்சியினர்
விழுப்புரத்தில் குடித்த டீ'க்காக 2 ரூபாய் கேட்ட டீக்கடைக்காரர் இரண்டு பேரின் முகங்களை உடைத்த திமுகவினரால் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரத்தில் குடித்த டீ'க்காக 2 ரூபாய் கேட்ட டீக்கடைக்காரர் இரண்டு பேரின் முகங்களை உடைத்த திமுகவினரால் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம் திருச்சி நெடுஞ்சாலையில் பிரபல நிறுவனத்தின் டீக்கடை ஒன்று உள்ளது, இந்த கடைக்கு நேற்றிரவு சிலர் என்று சிலர் டீ குடித்து உள்ளனர் பின்னர் பணம் கொடுக்கும்போது ஒரு டீ 12 ரூபாய் என அங்கிருந்த கடை ஊழியர்கள் கூறினர். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் பத்து ரூபாய் டீ'யை எப்படி 12 ரூபாய்க்கு விற்கலாம் என கேட்டு கடை ஊழியர்கள் 2 பேரிடமும் தகராறு செய்ததோடு அவர்களை தகாத வார்த்தையால் திட்டி தாக்கியுள்ளனர்.
மேலும் கடையில் இருந்த பொருட்களையும் அடித்து நொறுக்கி சூறையாடினர் இதனால் தாக்குதலை டீக்கடை ஊழியர்கள் ரெண்டு பேரும் காயமடைந்தனர். ஆனால் போலீசார் வர தாமதமானால் தாக்கிய நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர் மேலும் தாக்கிய நபர்கள் தி.மு.க கட்சியின் ஆதரவாளர்கள் என்பது தெரியவந்துள்ளது.
பின்னர் விழுப்புரம் மேற்கு போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர் தொடர்ந்து தாக்குதலில் காயம் அடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்சு மூலம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.