சேமிப்புதாரர்களுக்கு அடித்த யோகம் : சிறுசேமிப்பு திட்ட வட்டியை உயர்த்திய மத்திய அரசு
சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி வீதத்தை 0. 30 சதவீதம் வரை மத்திய அரசு உயர்த்தி உள்ளது.
பல்வேறு சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை மத்திய அரசு மாற்றி அமைத்து வருகிறது. இந்நிலையில் ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரையிலான இரண்டாவது காலாண்டுக்கான வட்டி விகிதத்தை மத்திய அரசு நேற்று அறிவித்தது. வட்டி விகிதம் 0.10 சதவீதம் முதல் 0.3 0 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.
ஓராண்டு கால டெபாசிட் ஆனா வட்டி 6.8 சதவீதத்தில் இருந்து 6.9% ,2 ஆண்டுகள் டெபாசிட்டுக்கு 7 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. மூன்றாண்டு கால டெபாசிட்டுக்கான வட்டி 7 சதவீதமாகவும் ஐந்தாண்டு கால டெபாசிட் கான வட்டி 7.5 சதவீதமாகவும் நீடிக்கும். ஐந்து ஆண்டுகால தொடர் வைப்புக்கான வட்டி விகிதம் 6.2 சதவீதத்திலிருந்து 6.5 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
பெண் குழந்தைகளுக்கான செல்வமகள் சேமிப்புத் திட்டவட்டியில் மாற்றம் செய்யப்படவில்லை.அது 8 சதவீதமாக நீடிக்கும். மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்ட வட்டி 8.2 சதவீதமாக நீடிக்கும். தேசிய சேமிப்பு திட்டம் பொது வருங்கால வைப்பு நிதி ஆகியவற்றுக்கான வட்டி விகிதத்திலும் மாற்றமில்லை. சேமிப்பு டெபாசிட்டுக்கான ஆன வட்டி விகிதமும் மாற்றமின்றி நான்கு சதவீதமாக நீடிக்கும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.