வளர்ச்சி மற்றும் சுகாதார இலக்கு 2030: இந்தியாவில் இளைஞர்கள் எதிர்காலம்!
உலகளவில் இளைஞர்கள் (15-29 வயது) மக்கள் தொகை 1.8 பில்லியனாக உள்ளது. அதில், ஐந்தில் ஒரு நபர் (20 சதவீதம்) இந்தியாவில் வசிக்கின்றனர். 2011 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியாவின் மொத்த மக்கள்தொகையில் 40.1 சதவீதம் இளைஞர்கள் உள்ளனர். உலக அளவில் அதிகமான இளைஞர்கள் வசிக்கும் நாடு இந்தியா. மேலும் வரவிருக்கும் காலத்தின் சமூக-அரசியல், பொருளாதார மற்றும் புள்ளிவிவர வளர்ச்சிகளையும் பிரதிபலிக்கிறது.
இளைஞர்கள் ஒரு தேசத்தின் அதிக உற்பத்தி திறன் கொண்ட பணியாளர்கள் என்பதால், 2025 ஆம் ஆண்டில் இந்தியா 4 வது பெரிய பொருளாதாரமாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவீத பங்களிப்பை அளிக்கிறது. இளைஞர்களை மேம்படுத்துவதோடு, கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதாரம், திறன் மேம்பாடு, சமூக ஈடுபாடு, மற்றும் அரசியல் மற்றும் நிர்வாகத்தில் இளைஞர்களின் பங்களிப்பு ஆகியவற்றின் மூலம் சமூகத்தில் அவர்களுக்கு சரியான இடத்தைக் கண்டுபிடிக்க அவர்களுக்கு உதவ வேண்டும். பெரியவர்களுக்கு சமமான வாய்ப்புகளை வழங்க வேண்டும். திறமை மற்றும் வறுமை காரணமாக இளைஞர்களிடையே அதிக வேலையின்மை விகிதம் இந்தியாவுக்கு நீண்ட கால சவாலாகும்.
"நிலையான முன்னேற்ற இலக்குகள் 2030 " (STGக்கள்) இளைஞர்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு இலவச மற்றும் சமமான வாய்ப்புகளை உள்ளடக்கிய தரமான கல்வி வேண்டும் எனக் கோருகிறது. மேலும், பலர் குறைந்த ஊதியம் பெறும் முறைசாரா துறை வேலைகளில் ஈடுபடுவதால், நல்ல தரமான வேலைவாய்ப்பு மற்றும் பணியிடங்களை உருவாக்குவது அவசியமாகும்.
குறைந்த ஊதியங்கள், புதிய வேலைகளுக்கான போட்டி மற்றும் வேலைகளின் ஒப்பந்த தன்மை மற்றும் மன ஆரோக்கியத்தில் அதன் தாக்கம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, ஓரங்கட்டப்பட்ட மற்றும் பாதிக்கப்படக்கூடிய இளைஞர்கள், மாற்றுத்திறனாளி இளைஞர்கள், கிராமப்புற இளம் பெண்கள் மீது ஒரு முக்கிய கவனம் செலுத்தி ஏராளமான வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும். இந்த பணியாளர்களை மேம்படுத்துவதற்கான திறன் மேம்பாட்டுடன் தொழில்நுட்ப மற்றும் தொழில்சார் பயிற்சியும் இளைஞர் கல்வியின் அம்சமாகும்.