சிறப்பு கட்டுரை : மண்டல் கமிஷன்! O.B.C இட ஒதுக்கீடும், பா.ஜ.க-வும்!
மண்டல் கமிஷனை 1979 ல் அமைக்க காரணமாக இருந்தவர்கள் அன்றைய ஜன் சங், இன்றைய பா.ஜ.க.
மண்டல் கமிஷனை அமல்படுத்தியதால் VP சிங் அரசாங்கத்தை பா.ஜ.க கவிழ்த்தது, எனவே அவர்கள் OBC மக்களுக்கு எதிரி என்பது தான் தமிழகத்தில் கட்டமைக்கப்பட்டுள்ள கருத்து.
ஆனால் உண்மை என்ன? சற்று வரலாறோடு பார்ப்போம்!
நேரு, இந்திரா காந்தி செவிசாய்க்காத பலநாள் கோரிக்கையான OBC மக்களைப்பற்றிய ஆய்வுக்கான மண்டல் கமிஷனை பிரதமர் மொராஜி தேசாய் அவர்கள் ஜனவரி 1, 1, 1979 அன்று அமைத்தார்.
பா.ஜ.க வின் முந்தைய அரசியல் வடிவமான ஜன் சங்கம் உள்ளடக்கிய ஜனதா கட்சியின் பிரதமர் அவர் என்பது நம் அனைவருக்கும் தெரியும். மொராஜி அரசாங்கத்தை தாங்கிய பல MP க்கள் ஜன் சங்கத்துக்காரர்கள். குறிப்பாக மொராஜியின் அமைச்சரவையில் 3 ஆர்.எஸ்.எஸ் ஸ்வயம்சேவகர்கள் கேபினட் மந்திரிகளாக இருந்தனர். (வாஜ்பாய்--வெளியுறவு துறை அமைச்சசர், அத்வானி, சிக்கந்தர் பகத்). அந்த மந்திரிசபை எடுத்த முடிவால் தான் OBC மக்களை பற்றி ஆய்வு செய்ய மண்டல் கமிஷன் அமைக்கப்பட்டது.
மண்டல் தனது பரிந்துரையை December 31, 1980அளித்தும் அப்போது பிரதமராக இருந்த இந்திராவும் அதன் பின்னர் வந்த ராஜிவ் காந்தியும் அதனை கிடப்பில் போட, 1989 ல் 85 பா.ஜ.க மேப் க்களின் ஆதரவோடு ஆட்சிக்கு வந்த V.P.சிங் August 7, 1990 அன்று மண்டல் கமிஷனை அமல்படுத்தினார்.
ராமர் கோவில் விவகாரத்தில் VP சிங், பா.ஜ.க நிலைப்பாட்டிற்கு எதிராக இருப்பதை கண்டு அவ்வரசாங்கத்திற்கு அளிக்கப்பட்ட ஆதரவை வாபஸ் பெற்றது பா.ஜ.க. 10 Nov 1990 அன்று VP சிங் அரசு கவிழ்க்கப்பட்டது(OBC களுக்கான இட ஒதுக்கீடு அமல்படுத்தி சரியாக மூன்று மதம் கழித்து).
ஆனால் OBCஇடஒதுக்கீடு அமல்படுத்தியத்தின் காரணமாக VP சிங் அரசாங்கத்தை பா.ஜ.க கலைத்ததாக பொய் கட்டமைக்கப்பட்டுள்ளது!
ஆனால் உண்மையென்ன?
மண்டல் கமிஷனை 1979 ல் அமைக்க காரணமாக இருந்தவர்கள் அன்றைய ஜன் சங், இன்றைய பா.ஜ.க. அதை அமல்படுத்தும் போது போது எதற்காக எதிர்க்க போகிறார்கள்?
VP சிங் அரசாங்கமே பா.ஜ.க ஆதரவில் தான் நடைபெறுகிறது. மண்டல் கமிஷனை செயல்படுத்துவதை நிறுத்தவேண்டுமென்றால் அதை அறிவிக்கும் முன்னரே அரசாங்கத்திற்கு அளிக்கும் ஆதரவை வாபஸ் பெற்று நிறுத்தி இருக்கலாம். ஆனால் அவர்கள் அதை அறிவித்து மூன்று மாதம் கழித்துதான் அரசுக்கான ஆதரவை வாபஸ் வாங்கினார்கள்.