மருத்துவ படிப்பு சேர்ந்த மாணவர்கள் NEET கோச்சிங் பெற்றதற்கான ஆதாரம் இருக்கிறதா? RTI கூறுவது என்ன?
ராஜன் கொடுத்த அறிக்கையில் பக்கம் 79,80-இல் தெளிவாக, "2019-20 மருத்துவ படிப்பில் சேர்ந்த 99% மாணவர்கள் NEET கோச்சிங் பயிற்சி பெற்றவர்கள்", என்று குறிப்பிட்டுள்ளார்.
NEET தேர்வில் விலக்கு கேட்டு அதன் பாதகங்களை விளக்கும் விதமாக தி.மு.க அரசாங்கம் அமைந்தவுடன் நீதிபதி A.K.Rajan தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. நடுநிலையாக இருந்து ஆராய வேண்டிய AK ராஜன், முதல் நாளே NEET-ஐ விமர்சித்து பேட்டி கொடுத்து நம்மை வியப்புக்கு உள்ளாக்கினார்.
அதன் பின்னர் அக்குழு தனது அறிக்கையை சமர்பிக்கிறது. பல இடங்களில் சில முக்கிய தகவல்கள் விடுபட்டு இருந்தது. அதே போல கொடுத்த பல தகவல்களுக்கான ஆதாரங்கள் தெளிவாக கொடுக்கப்படவில்லை.
ராஜன் கொடுத்த அறிக்கையில் பக்கம் 79, 80-இல் தெளிவாக குறிப்பிடுகிறார், "It signifies that of the students who secured admission in the year 2019-20, 99% students had received prior training before the NEET". 2019-20 மருத்துவ படிப்பில் சேர்ந்த 99% மாணவர்கள் NEET கோச்சிங் பயிற்சி பெற்றவர்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
AK Rajan Committee கொடுத்த தகவல்களுக்கு ஆதாரம்? RTI பதில்? ---> ஆதாரம் இல்லை
— Yuvaraj Ramalingam (@YuvarajPollachi) November 27, 2021
ராஜன் கொடுத்த அறிக்கையில் பக்கம் (79,80) ராஜன் தெளிவாக குறிப்பிடுகிறார் (1/n) pic.twitter.com/SZU3oP7buT
அதே போல September 24 2021 அன்று India Ahead News தொலைக்காட்சிக்கு கொடுத்த பேட்டியில் இந்த தகவல் அரசாங்கத்தின் சுகாதாரத் துறை கொடுத்ததாக குறிப்பிடுகிறார்.
அதே போல September 24 2021 அன்று கொடுத்த பேட்டியில் "இந்த தகவல் அரசாங்கத்தின் Medical Department கொடுத்ததாக குறிப்பிடுகிறார் " .(3/n) pic.twitter.com/zjErgoz4PQ
— Yuvaraj Ramalingam (@YuvarajPollachi) November 27, 2021
அதை முன் வைத்து 24/09/2021 அன்று நான் (Yuvaraj Ramalingam) RTI சட்டத்தின் கீழ் இத்தகவலுக்கான ஆதாரத்தை கோரி விண்ணப்பம் செய்தேன். ஆன்லைனில் பதிவு செய்யப்பட்டது என்பதால் முதலில் மனிதவள மேம்பாட்டு பிரிவுக்கு அனுப்பப்பட்டு பின்னர் கேட்கப்பட்ட தகவலின் அடிப்படையில் அது தமிழக சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறைக்கு அனுப்பப்பட்டது.