#WhereIsGokul 10 வருடங்கள் கடந்து விட்டது : எங்கே கோகுல்?
10 வருடங்கள் கடந்தும் அமைச்சர் செந்தில் பாலாஜி கடத்தியதாக சொல்லப்படும் கோகுல் எங்கு இருக்கிறார் என்ற தகவல் கிடைக்கவில்லை
2011 ஆம் ஆண்டு கரூரை சேர்ந்த கோகுல் என்ற இளைஞரை கடத்தி போதை வயப்படுத்தி அவரிடம் இருந்து பல கோடிகள் மதிப்புடைய சொத்துக்கள் எழுதிவாங்கப்பட்டதாக கோகுலின் தாயார் தெய்வானை அம்மாள் குற்றம் சாட்டினார்.
இச்செய்தி 2011 முதலே பல இடங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனினும் தனது அதிகார பலத்தாலும் பணபலத்தாலும் ஆள் பலத்தாலும் அதை செந்தில் பாலாஜி மறைத்தே வந்தார் என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.
10 வருடங்கள் கடந்தும் இன்று வரை அமைச்சர் செந்தில் பாலாஜி கடத்தியதாக சொல்லப்படும் கோகுல் எங்கு இருக்கிறார் என்ற தகவல் கிடைக்கவில்லை.
`ரூ.25 கோடி சொத்துக்காக என் மகனை கடத்திவிட்டார்!' - செந்தில் பாலாஜி மீது கரூர் பெண் அதிர்ச்சிப் புகார் #SenthilBalaji #Karurhttps://t.co/FV7ZI0NLeM
— விகடன் (@vikatan) May 11, 2019
தெய்வானை அம்மாள் நியூஸ் ஜெ தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி
இந்த வழக்கை அடிக்கோடிட்டு பல முறை பேசி இருக்கிறார் இன்றைய முதல்வர் ஸ்டாலின்.
முரசொலி 2.4.2013
ஏப்ரல் 17 2016 அன்று கரூர் தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த ஸ்டாலின் இதை மேற்கோள் காட்டி பேசி இருக்கிறார்
தி.மு.க ஆட்சிக்கு வந்த உடன் உங்கள் மகனை மீட்டுக்கொடுப்பேன் என்று அன்றைய தினமே தெய்வானை அம்மாவுக்கு ஸ்டாலின் அவர்களால் வாக்குறுதி கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
செந்தில் பாலாஜியால் கடத்தப்பட்டதாக கூறப்படும் கோகுலை கண்டுபிடிப்பது எப்பொழுது என்பது கேள்விக்குறியாக உள்ளது. இன்றைய முதல்வரின் அன்றைய வாக்கை நம்பி தன் மகன் வருவான் என்ற நம்பிக்கையில் பத்து வருடங்களாக கயிற்று கட்டிலில் சுருங்கிய கண்களோடு வழிமேல் விழிவைத்து காத்திருக்கும் அந்த தாய்க்கு பதில் கூறப்போவது யார்?