தேர்தலில் வெற்றி பெற தி.மு.க வாரி இறைத்த தொகை இத்தனை கோடிகளா? யப்பா மலைக்க வைக்கும் கணக்கு!

Update: 2022-01-14 08:15 GMT

தேர்தலில் வெற்றி பெற்று ஸ்டாலினை முதல்வராக்க தி.மு.க தேர்தலில் கோடிகளை இறைத்தது தொடர்பான கணக்கு பட்டியல் வெளிவந்து பரபரப்பாகியுள்ளது.

கடந்த 2011 முதல் 2021 வரை தி.மு.க தொடர்ந்து பத்து ஆண்டுகள் எதிர்கட்சியாக இருந்தது, இன்னும் ஐந்து ஆண்டுகள் எதிர்கட்சியாக இருந்தால் மாவட்ட செயலாளர்கள் வரை சொல்லிக்கொள்ளாமல் ஓடிவிடுவார்கள் என நன்கு உணர்ந்த தி.மு.க எப்படியாவது இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என தீயாக வேலை செய்தது, அதன் நீட்சிதான் நிறைவேற்ற முடியுமா என யோசிக்காமல் அள்ளி தெளிக்கப்பட்ட வாக்குறுதிகள் மற்றும் கணக்கு பாராமல் அள்ளி இறைக்கப்பட்ட கோடிகள் பல. இப்படி அள்ளி தெளித்த வாக்குறுதிகள் பற்றி விழிப்புணர்வு மக்களுக்கே வந்துவிட்டது, ஆட்சியை பிடிக்க தி.மு.க'வின் போங்கு என்பதை மக்களே இப்பொழுது உணர்ந்து கொண்டனர். ஆனால் வாரி இறைத்த பணத்திற்கு கணக்கு வழக்குகள் வெளிவராமலே இருந்தன.

இந்நிலையில் வெளிவந்துள்ளது தி.மு.க'வின் வருடாந்திர தணிக்கை அறிக்கை. அதில் குறிப்பிடப்பட்டுளதாவது, 2011 சட்டமன்ற தேர்தலில் பிரச்சாரம் மேற்கொண்டதற்காக வாகனச் செலவு 1,63,43,816 செலவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் பிரச்சாரத்தின் போது நட்சத்திர பேச்சாளர்களுக்காக 77,93,588 செலவு செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

பிரச்சாரத்திற்காக தொலைக் காட்சி மற்றும் அச்சு ஊடகங்களுக்கு 56,69,98,297 செலவு செய்யப்பட்டதாகவும், குறுஞ்செய்தி விளம்பரத்திற்கு ரூ. 10,74,438 , கேபிள் டிவி சேனல்களுக்கு 37,11,48,929, இணையதளங்களுக்கு 18,94,60,292, அதேபோல் பேனர், சுவர் விளம்பரம் ,பொதுக்கூட்டங்கள் போன்றவற்றை நடத்துவதற்கு 7,68,290, தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கான நிதி 48,75,00,000 வழங்கப்பட்டது என குறிப்பிடப்பட்டுள்ளது. மிகவும் முக்கியமாக தேர்தல் நிபுணர் பிரஷாந்த் கிஷோர் அவர்களுக்கு தேர்தல் ஆலோசித்தல் கட்டணமாக 69,00,00,000 கொடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த தணிக்கை அறிக்கையின் படி தோராயமாக 232 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Source - Asianet NEWS

Similar News