கேரள அரசு பாதிரியார் வழக்கை அலட்சியமாக கையாண்டதா? கேரள அரசை இயக்குவது யார்?
கன்னியாஸ்திரியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கிருஸ்துவ பாதிரியார் பிஷப் பிராங்கோ'விற்கு எதிராக கேரள அரசு வழக்கை சரியாக கையாளாமல் பிஷப் பிராங்கோ'வை தப்ப வைத்துள்ளதா என்ற சந்தேகம் நீதிபதி குறிப்பிட்ட தீர்ப்பின் மூலம் ஏற்பட்டுள்ளது.
கேரள சீரோ மலபார் திருச்சபையின் ஜலந்தர் பிஷப்பாக இருந்தவர் பிராங்கோ முளய்க்கல், கேரளத்தின் கோட்டயம் குருவிலங்காடு மடத்தில் கடந்த 2014 ஆண்டு முதல் 2016 ஆண்டு வரை 13 முறை பிஷப் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக கன்னியாஸ்திரி ஒருவர் 2018'ம் பரபரப்பான குற்றசாட்டை முன்வைத்தார். பிஷப் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டும் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை, இதனால் போராட்டத்தில் ஈடுபட்டனர் கன்னியாஸ்திரிகள், போராட்டம் தீவிரமடைந்து கன்னியாஸ்திரிகள் தெருவில் இறங்கும் அளவிற்கு வெடித்தது.
போராட்டம் தீவிரமடைந்த பிறகு பிஷப் பிராங்கோ 2018'ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21'ம் தேதி கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் ஜாமீனில் வெளிவந்த பிறகு இந்த வழக்கில் பிஷப் பிராங்கோ விற்கு எதிராக சாட்சி கூறிய பாதிரியார் குரியகோஸ் கட்டுத்தாரா என்பவர் அக்டோபர் மாதம் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட கன்னியாஸ்திரிகள் இடமாற்றம் செய்யப்பட்ட கொடுமைகளும் நடந்தது.
இத்தனை ஆண்டுகளாக பரபரப்பாக நடந்து வந்த இந்த வழக்கின் தீர்ப்பு நேற்று வெளியாகியது. தீர்ப்பு வழங்குவதற்கு முன் 105 நாட்கள் ரகசிய விசாரணை நடைபெற்றது. இறுதியாக தீர்ப்பை வழங்கிய நீதிபதி ஜி.கோபகுமார் தீர்ப்பில் கூறுகையில், குற்றம் சுமத்தப்பட்ட பாதிரியார் பிஷம் பிராங்கோ முளய்க்கலை விடவிப்பதாகவும், பிஷப் குற்றம் செய்ததாக தெளிவுபடுத்துவதில் அரசு தரப்பு தோற்றுவிட்டதாக கூறினார்.
கிருஸ்துவ ஆதிக்கம் அதிகமாகி வரும் கேரளத்தில் பாதிரியார் மீதான கன்னியாஸ்திரிகளின் பாலியல் புகார் சரியாக அரசு தரப்பில் நிரூபிக்கபடவில்லை என்பது கேரள அரசின் நிழல் பாதிரியார்களின் பின்புலத்தில் இயங்குகிறதோ என சந்தேகம் எழுகிறது!