நகர்புற உள்ளாட்சி தேர்தலில் ரசிகர்களை களமிறக்கும் விஜய்

Update: 2022-01-28 08:45 GMT

வருகிற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நடிகர் விஜய் தனது ரசிகர்களை போட்டியிட அனுமதித்துள்ளார்.


தமிழகத்தில் கடந்த வருடம் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் 169 பேர் போட்டியிட்டு 129 பேர் வெற்றி பெற்றனர். அவர்களை விஜய் நேரில் அழைத்து வாழ்த்திய தோடு மட்டுமல்லாது மக்கள் பணியை சிறப்பாக செய்யும்படி அறிவுரை வழங்கினார். அடுத்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளதாக தேர்தல் ஆணையம் தேதிகள் அறிவித்துள்ள நிலையில் தனது ரசிகர்களை போட்டியிட விஜய் அறிவுறுத்தியுள்ளார்.


மேலும் அதிக வேட்பாளர்களை நிறுத்தவும் தேர்தலில் தனது படம் மற்றும் ரசிகர் மன்ற கொடியை பயன்படுத்திக்கொள்ளவும் விஜய் அனுமதி வழங்கியுள்ளார்.



Similar News