தேர்தல்களில் தி.மு.க'வை தண்ணீர் குடிக்க வைக்கும் அளவிற்கு திணறல் ஏற்படுத்தி வருகிறது கொங்கு மண்டலம் அது பற்றிய ஒரு பார்வை.
கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் 15,38,411 வாக்காளர்கள் உள்ளனர், கோவை மாவட்டம் அ.தி.மு.க'வின் பலம் வாய்ந்த இடம் காரணம் அங்கு கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை இழந்தாலும் கோவை மாவட்டத்தில் உள்ள 10 இடங்களும் அ.தி.மு.க கூட்டணி வசமே வந்தது, பா.ஜ.க.வின் 4 எம்.எல்.ஏ'க்களில் ஒரு எம்.எல்.ஏ கோவையில் வெற்றி பெற்ற இடத்தை கைப்பற்றினார்.
இதன் காரணமாகவே தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு கோவை மாவட்டத்திற்கு தான் முதல் முதலில் வருகை புரிந்தார் "சட்டமன்றத்திலும் தி.மு.க கோவை மாவட்டத்தை புறக்கணிக்கவில்லை எங்களுக்கு வாக்களித்தவர்கள் பெருமைப்படும் அளவுக்கு வாக்காளர்கள் தி.மு.க'வுக்கு வாக்களிக்காமல் போய் விட்டோமே என வருந்தும் அளவுக்கும் தி.மு.க அரசின் செயல்பாடுகள் இருக்கும்" என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தது கோவை மாவட்ட தோல்வியை மனதில் வைத்துதான்.
அவரைத் தொடர்ந்து தி.மு.க'வின் பட்டத்து இளவரசர் உதயநிதியும் கூட "கோவை மக்களை ஏமாற்றி விட்டனர் நான்கு அல்லது ஐந்து இடங்களில் வெற்றி பெறுவோம் என எதிர்பார்த்தோம் ஆனால் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை உள்ளாட்சித் தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறுவோம்" என தெரிவித்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கோவை மாவட்டத்திற்கு பொறுப்பாளராக நியமித்தது உள்ளாட்சித் தேர்தல் வேலையை பார்க்கச் சொல்லும் வகையில் இருந்தது தி.மு.க'விற்கு கோவை மாவட்டத்தின் பாதிப்பு.