அ.தி.மு.க-வின் கோட்டையான கோவையை கைப்பற்ற ஒரு ஓட்டுக்கு கொடுத்த விலை ரூ. 40,000 - திருமங்கலம் ஃபார்முலாவை தூக்கிச் சாப்பிட்ட அண்டர் கிரவுண்ட் ஆபரேஷன்!

Update: 2022-02-24 03:39 GMT

வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதில் பெயர் போனது திருமங்கலம் தேர்தல். அதனையே தூக்கிச் சாப்பிட்டு ஒட்டுமொத்த தமிழகத்தையும் உற்று நோக்க வைத்துள்ளது கோவை பார்முலா. 

2009ல் நடந்த திருமங்கலம் இடைத் தேர்தலில் ஒரு ஓட்டுக்கு 5 ஆயிரம் ரூபாய் கொடுத்து வாக்காளர்களை ஒட்டுமொத்தமாக சுருட்டியது திமுக. அதனால்தான் அந்த தேர்தலில் பெரிய அளவிலான வெற்றியை பதிவு செய்தது திமுக. அதிலிருந்துதான் பெரிய அளவிலான வெற்றி பெற வேண்டும் என்றால், திருமங்கலம் ஃபார்முலாவை வைத்து வென்று விடலாம் என அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. 

நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், ஓட்டுக்கு பணம் கொடுப்பது கோவையில் உச்சத்தை தொட்டிருக்கிறது. இதுவரை திருமங்கலம் தேர்தல் தான் பெரிய அளவில் பேசப்பட்டது. அதனையும் விஞ்சி, நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

அங்கு ஒரு ஓட்டுக்கு 40 ஆயிரம் ரூபாய் வரைக்கும் கொடுக்கப்பட்டிருக்கிறது. கோவை மாநகராட்சியில் மொத்தம் 100 வார்டுகள் உள்ள நிலையில், ஒரு வார்டுக்கு  திமுக ஒரு கோடி ரூபாய் இறக்கியிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் வெள்ளி கொலுசு, வெள்ளி காமாட்சி விளக்கு, சேலை, ஹாட் பாக்ஸ் இன்னபிற பரிசுப்பொருட்கள் வழங்கியிருக்கின்றன. 

குறைந்தபட்சமாக ஆயிரம் ரூபாயும், செல்வாக்கான நபர்கள் போட்டியிடும் வேட்பாளர்கள் வார்டுகளில் ஒரு ஓட்டுக்கு 5 ஆயிரம் ரூபாய் வரைக்கும் கொடுத்திருக்கிறார்கள். 

மேயர் வேட்பாளர் களமிறங்கிய வார்டில் ஒரு ஓட்டுக்கு 40 ஆயிரம் ரூபாய் வரைக்கும் கொடுத்திருக்கிறார்கள். ஒரு குடும்பத்தில் 4 ஓட்டுக்கள் உள்ளவர்கள், 1 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் வாங்கியுள்ளனர். சிலர் ஊட்டி, கேரளா என்று டூர் போய்விட்டார்கள். அந்த ஒரு வார்டில்மட்டுமே 75 கோடி ரூபாய்க்கு மேல் வாரி இறைத்துள்ளனர். 

 

Tags:    

Similar News