விண்வெளியில் சுதந்திர தின கொண்டாட்டம் - கம்பீரமாக பறந்த இந்திய மூவர்ணக் கொடி!

பூமியிலிருந்து 30 கிலோமீட்டர்தொலைவில் விண்வெளியில் இந்திய மூவர்ண கொடி பறக்கவிடப்பட்டது.

Update: 2022-08-17 02:53 GMT

நேற்று நாடு முழுவதும் இந்திய சுதந்திர தினத்தில் 75ஆவது கொண்டாட்டத்தை அனைத்து தரப்பு மக்களும் கொண்டாடிக் கொண்டிருந்தார்கள். இந்தியாவில் மட்டுமல்ல உலகெங்கும் வாழும் தமிழர்கள் சார்பில் பல்வேறு மூலைமுடுக்குகளில் தம்முடைய தேசிய கொடி கம்பீரமாக பழக்கப்பட்ட இந்திய சுதந்திர தினத்தில் பல்வேறு அமெரிக்க வாழ் இந்தியர்களும் வெளிநாட்டுவாழ் இந்தியர்கள் சிறப்பாக கொண்டாடினார்கள். நாம் எங்கு இருந்தாலும், நம்முடைய நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் ஒரு தருணமாக இது பார்க்கப்பட்டது.


அந்தவகையில் தற்போது பூமியில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் அதாவது விண்வெளியில் நம்முடைய தேசியக்கொடி ஏற்றப்பட்டது. மிகவும் கம்பீரமாக பழக்கப்பட்ட மூவர்ணக்கொடி பார்ப்பதற்கு கண் கொள்ளாக் காட்சியாக இருந்தது என்றால் மிகையாகாது. இந்தியர்கள் சாதித்த சாதனைகள் உலகில் மட்டுமில்லாது விண்வெளியிலும் பல்வேறு மாற்றங்களை நாம் கொண்டு வந்து இருக்கிறோம். குறிப்பாக நம்முடைய இஸ்ரோ அனுப்பிய விண்கலம் தான் முதன்முதலாக நிலவில் மற்றொரு பகுதியை புகைப்படம் எடுத்தது என்று சொன்னால் அதனுடைய தம்முடைய அறிவியல் வளர்ச்சியின் சிறப்பாகும்.


இவற்றுக்கெல்லாம் காரணம் நம்முடைய இந்தியாவில் அனைவரும் வேற்றுமையில் ஒற்றுமை என்பதே முக்கிய நோக்கமாக கொண்டு உள்ளார்கள். நாம் அனைவரும் இந்தியாவினுடைய மக்கள் எனவே நாட்டுப்பற்று மக்கள் அனைவரும் சேர்ந்து நின்று மரியாதை செலுத்தும் விதமாக 75வது சுதந்திர தினத்தை சிறப்பாகக் கொண்டாடி 76 ஆவது வருடத்தில் அடியெடுத்து வைத்திருக்கிறோம். விண்வெளியிலும் நம்முடைய தேசியக்கொடி சிறப்பாக பட்டொளி வீசி பறக்கும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

Input & Image courtesy: DD news

Tags:    

Similar News