ஜேம்ஸ்வெப் தொலைநோக்கி மூலம் பிரம்மாண்டமான வியாழன் புகைப்படம் - நாசா வெளியீடு!
ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி மூலமாக பிரம்மாண்டமான வியாழன் கோளின் புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
விண்வெளியில் நாளுக்கு நாள் அதிசயங்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. குறிப்பாக ஒவ்வொரு கோள்களைப் பற்றியும் நாம் தினம் தினம் ஒரு புது விஷயங்களை தெரிந்து கொண்டுதான் இருக்கிறோம். அத்தகைய விஷயங்களை மக்களுக்கு கொண்டு சேர்க்கும் மிகப் பெரிய அமைப்பாக அமெரிக்காவில் உள்ள விண்வெளி ஆராய்ச்சி நிலையமான இருப்பதுதான் நாசா. நாசாவின் முக்கிய பணியை மக்களுக்கு விண்வெளியில் நடக்கும் மாற்றங்களையும் குறிப்பாக கோள்களில் என்ன நடக்கிறது? என்பது பற்றி அன்றாட தகவல்களைக் கொடுத்துக் கொண்டு வருகிறது.
அந்த வகையில் தற்போது செவ்வாயில் முக்கிய கவனம் செலுத்தி கொண்ட நாசா தன்னுடைய ஆராய்ச்சி வியாழன் கோள் அருகே திருப்பியுள்ளது. வியாழன் கோளின் புதிய புகைப்படத்தை தற்போது ஜேம்ஸ் வெப் என்ற தொலைநோக்கி வழியாக பதிவு செய்து அதனுடைய அதிகாரப்பூர்வமான வலைதளங்களில் பதிவிட்டு உள்ளது. அந்தப் புகைப்படத்தை பதிவு செய்த சில வினாடிகளிலேயே இலட்சக்கணக்கான மக்கள் அந்த புகைப்படத்திற்கு லைக் செய்துள்ளார்கள். முற்றிலும் வியாழனின் தோற்றம் மாறுபட்டதாக அந்த புகைப்படத்தில் பதிவாகியுள்ளது.
மேலும் வியாழனின் இந்த புகைப்படம் புவியிலிருந்து வட, தென் துருவ மண்டலங்களின் அமைப்பும் ஒன்றான அரோரா நிகழ்வின் ஒரு பகுதியாக காணப்படுகிறது. மேலும் வியாழன் கோளில் தற்போது மனிதர்கள் வசிக்க கூடிய சூழ்நிலை உள்ளதா? என்பது குறித்தும் ஆய்வு செய்து வருகிறார்கள். ஆனால் அங்கு தண்ணீர் இல்லாதது மிகப் பெரிய பிரச்சினையாகவே இருந்து கொண்டு வருகிறது.
Input & Image courtesy: News