54வது இந்திய சர்வதேச திரைப் படவிழா 2023.. நிகழ்வின் மையமாக விழா கொண்டாட்டம்..

Update: 2023-11-12 04:20 GMT

கோவாவில் நவம்பர் 20 முதல் 28 வரை நடைபெறும் 54வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படங்கள் ,வெப் தொடர்களின் களியாட்டம் காத்திருக்கிறது. இந்தியாவின் 54வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவிற்கு , மிகவும் எதிர்பார்க்கப்பட்ட "கொண்டாட்ட நிகழ்வு" இரண்டாம் பதிப்பை வழங்குவதில் தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகம் மிகவும் மகிழ்ச்சியடைகிறது. திரைப்பட நட்சத்திரங்களை பார்வையாளர்களுடன் இணைக்கவும், உலகளாவிய சினிமா கலைத்திறனைக் கொண்டாடவும் மற்றும் திரைப்படங்களின் அசாதாரணத் தேர்வைக் கொண்டு வரவும், திருவிழாவின் முக்கிய நெறிமுறைகளை நிலைநிறுத்தவும் இந்தப் பிரிவு நுட்பமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.


ஏ.ஆர் ரகுமான் இசையில் அரவிந்த் சாமி, விஜய் சேதுபதி மற்றும் அதிதி ராவ் ஹைதாரி நடித்துள்ள காந்தி டாக்ஸ் , சல்மான் கான் தயாரித்து இளம் திறமைகளை உள்ளடக்கிய ஃபேரி திரைப்படங்களின் உலக அரங்கேற்றம், ரஹ்மான், பங்கஜ் திரிபாதி மற்றும் பார்வதி திருவோத்து நடித்த கடக் சிங் என்ற இந்தி திரைப்படம், சித்தார்த் ரந்தேரியா நடித்த ஹர்ரி ஓம் ஹர்ரி என்ற குஜராத்தி திரைப்படம், நவாசுதீன் சித்திக் நடித்த ரவுது கி பெலி என்ற இந்தி திரைப்படம், விஜய் ராகவேந்திரா நடித்த கிரே கேம்ஸ் என்ற கன்னட திரைப்படம் உள்ளிட்டவை திரையிடப்பட உள்ளன. கரண் ஜோஹர் மற்றும் சாரா அலி கான் இடையேயான உரையாடலுடன் ஏ வதன் மேரே வதன் திரைப்படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்பட உள்ளது.


இது குறித்து பேசிய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், இந்தியாவின், 'சல்மான் கான் தயாரித்த 'ஃபாரே' திரைப்படத்தின் மதிப்பிற்குரிய திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் திறமையான நடிகர்களுக்கு நான் அன்பான வரவேற்பைத் தெரிவித்துக் கொள்கிறேன். அரவிந்த் சுவாமி மற்றும் விஜய் சேதுபதியுடன் ஜீ நிறுவனம் தயாரித்த காந்தி டாக்ஸ்; பங்கஜ் திரிபாதியுடன் 'கடக் சிங்'; நாக சைதன்யா மற்றும் பார்வதி திருவோத்து நடித்த அமேசான் ஒரிஜினல் தொடர் 'தூதா' ஆர்யா மற்றும் திவ்யா பிள்ளை நடித்த 'தி வில்லேஜ்' போன்றவை இந்தச் சினிமா கொண்டாட்டத்திற்கு ஒரு சிறப்பை சேர்க்கிறது" என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News