இப்படியும் ஒரு வினோதமான உலக சாதனையா? அசத்தி இருக்கிறார் ஒருவர்

அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு விவசாயி தனது தோட்டத்தில் விளைந்த பூசணிக்காயை படகாக மாற்றி சவாரி செய்து சாதனை படைத்துள்ளார்.

Update: 2023-10-13 06:15 GMT

உலக சாதனை புரிய வேண்டும் என்று பலருக்கும் ஆசை இருக்கும். வெவ்வேறு வகையான முயற்சிகளை மேற்கொண்டு வெவ்வேறு வகையான சாதனைகளை புரிவார்கள். சாதனை என்ற பெயரில் வேதனைகளை சந்தித்தவர்களும் உண்டு சாதனை என்ற பெயரில் சிகரம் தொட்டவர்களும் உண்டு. ஆனால் இவரது யோசனை சற்று வித்தியாசமாகவும் அதிகம் கவருவதாகவும் உள்ளது. அப்படி என்ன செய்தார் இந்த மனிதர் என்பதைப் பற்றி காண்போம்.


அமெரிக்காவின் மிசோரியை சேர்ந்த விவசாயி தனது தோட்டத்தில் பூசணிக்காயை விளைவித்துள்ளார். அந்த பூசணிக்காயின் எடை 547 கிலோ இருந்துள்ளது. உடனே இவருக்கு ஒரு யோசனை தோன்றியுள்ளது. அதனைப் படகாக மாற்றி சவாரி செய்தால் எப்படி இருக்கும் என்பதுதான். இவரது யோசனை முயற்சி வீண் போகவில்லை. அந்த பூசணிக்காயை ஒரு படகாக மாற்றினார். அதில் மிசோரி ஆற்றில் 38.4 மைல் தூரம் சவாரி செய்து புதிய உலக சாதனை படைத்தார். அவரது வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது.


SOURCE :DAILY THANTHI

Similar News