ஓகேனக்கல் குடிநீரில் Flouride: இல்லவே இல்லை என கதை அளக்கும் தருமபுரி எம்பி!

Update: 2024-01-12 01:58 GMT

ஒகேனக்கல் ஒருங்கிணைந்த குடிநீர் திட்டம் என்பது தர்மபுரி மாவட்டம் , ஒகேனக்கல்லில் மேற்கொள்ளப்பட்டு வரும் புளோரோசிஸ் குறைப்பு குடிநீர் திட்டமாகும் . இது தமிழ்நாடு நீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியத்தால் செயல்படுத்த திட்டமிடப்பட்டது. ஜப்பான் வங்கி நிதியுதவியுடன்  காவிரி நதிநீரைப் பயன்படுத்தி செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டம் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள மற்றும் புளோரோசிஸ் பாதிக்கப்பட்ட தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. தமிழகத்தில் 10 மாவட்டங்கள் ஃவுளூரோசிஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தருமபுரி மாவட்டம் மாநிலத்திலேயே அதிக அளவு புளோரைடு செறிவைக் கொண்டுள்ளது.

ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தில் குளறுபடி இருப்பதும், இத்திட்டத்தை திமுக அரசு சரிவர செயல்படுத்தாத காரணத்தால் தான் இன்னும் fluoride கலந்த நீரை தர்மபுரி மாவட்டத்தில் மக்கள் பயன்படுத்தும் நிலை நீடிக்கிறது என மத்திய தணிக்கை குழு அறிக்கை சொல்கிறது.

ஆனால் இது வதந்தி என தர்மபுரி திமுக எம்பி செந்தில் குமார் மக்களிடையே பொய்யான தகவல் பரப்பி வருகிறார். 

 

Similar News