பிறக்கும்போதே சாதனை செய்த குழந்தை

கனடாவில் பிறந்த ஒரு குழந்தை பிறக்கும்போது 6.5 கிலோ எடையுடன் பிறந்து சாதனை செய்திருக்கிறது.

Update: 2023-11-11 07:45 GMT

குழந்தைகள் பிறந்து வளர்ந்த சாதனை படைப்பதுண்டு. கனடாவில் ஒரு ஆண் குழந்தை பிறக்கும் போது 6.5 கிலோ எடை இருந்ததால் புதிய சாதனை படைத்திருக்கிறது. பொதுவாக குழந்தைகள் பிறக்கும்போது அதிகபட்சமாக 3.5 அல்லது 4 கிலோ வரை எடையுடன் இருக்கக்கூடும். இந்த ஆண் குழந்தை பிறக்கும்போது 6.5 கிலோ எடை இருந்ததால் அனைவரும் அதிசயத்தனர். ஒன்டாரியோ மாகாணத்தைச் சேர்ந்த சான்ஸ் அயர் மற்றும் பிரிட்னி தம்பதி தான் இந்த குழந்தையின் பெற்றோர்.


ஆஸ்பத்திரி நிர்வாகம் 2010 க்கு பின் பிறந்த அதிக எடை உள்ள குழந்தை என்று அறிவித்துள்ளனர். குழந்தை குண்டாக பிறந்ததை பார்த்து தந்தை அதிர்ச்சி அடைந்தார். அவர் பத்திரிகையாளர்களிடம் கூறும் போது நான் இதுவரை இவ்வளவு எடையில் குழந்தை பிறந்துள்ளது என்பதை பற்றி கேள்விப்பட்டதே இல்லை .டாக்டர்களும் செவிலியர்களும் குழந்தை எவ்வளவு பெரிதாக பிறக்கும் என்று பந்தயம் கட்டியது கூட கண்டேன். பிறந்ததும் எடை எந்திரத்தில் வைத்து ஆச்சரியமடைந்தார்கள்.


கோப்பையை வென்றது போல் குதூகலம் அடைந்தார்கள். குதித்து குதித்து சந்தோஷம் கூச்சல் போட்டார்கள். அது எனக்கு கொஞ்சம் வேடிக்கையாக இருந்தது. முட்டாள்தனமாகவும் தெரிந்தது. நாங்கள் ஒருவரை ஒருவர் வியப்பாக பார்த்துக் கொண்டோம் என்கிறார். ஆனால் இது எதையும் அறியாமல் ஆபரேஷன் மயக்கத்தில் இருந்தார் தாய். நினைவு திரும்பிய அவர் சாதனை குழந்தையை உச்சி முகர்ந்தார். குழந்தைக்கு சோனி என்று பெயர் சூட்டியுள்ளனர். 


SOURCE :DAILY THANTHI

Similar News