மதம் மாற்ற 175 பில்லியன் டாலர்..9,911 புதிய சர்ச்சுகள்- அதிர்ச்சித் தகவல்கள்.!

மதம் மாற்ற 175 பில்லியன் டாலர்..9,911 புதிய சர்ச்சுகள்- அதிர்ச்சித் தகவல்கள்.!

Update: 2021-01-19 11:05 GMT

அமெரிக்க கிறிஸ்தவ அமைப்பு International Mission Board இந்தியாவில் இந்து மக்களை மதம் மாற்ற, $175 பில்லியன் அமெரிக்க டாலர் நிதி ஒதுக்கி தீவிரமாக மதமாற்ற செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறது. தாங்கள் செய்வது சட்ட ரீதியாக தவறு என்று தெரிந்தும் கடவுளின் பெயரால் இந்த அமைப்பின் உறுப்பினர்கள் மத மாற்றத்தில் ஈடுபடுகின்றனர்.

இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொரு பிரிவினரையும் வகைப்படுத்தி மதம் மாற்ற குறி வைக்கும் இவர்கள் முஸ்லிம்களையும் விட்டு வைப்பதில்லை. எனினும் இந்து கடவுள்கள் மீது இவர்கள் அதீத வெறுப்பு கொண்டிருப்பதாகத் தெரிகிறது. ஒரு இந்து பெண்ணை மதம் மாற்ற "எங்கள் கடவுள் உங்களை அன்பு செய்கிறார். ஆனால் அவர் பொறாமை கொண்டவர். இந்த சிலைகளை வழிபட்டுக் கொண்டு எங்கள் 'ஏக இறைவனையும்' வணங்கக் கூடாது." என்று மூளைச் சலவை செய்து சிலைகளை அகற்றச் செய்து இருக்கின்றனர்.

 

அமெரிக்காவில் இருந்து வரும் மிஷனரிகள் மதம் மாறிய இந்துக்களை துணைக்கு அழைத்துக் கொண்டு அவர்களை முன்னுதாரணமாகக் காட்டி இந்துக்களை மதம் மாற்றும் செயலில் ஈடுபடுவதாக தங்களது இணையதளத்தில் வெளிப்படையாக தெரிவித்துள்ளனர். வெளிநாட்டவர்கள் மிஷனரி விசா அல்லது சுற்றுலா விசாவில் தான் இந்தியாவுக்கு வர இயலும்.

மிஷனரி விசாவில் வருபவர்கள் இந்திய அரசிடம் FCRA பதிவு பெற்ற உள்ளூர் கிறிஸ்தவ அமைப்புடன் இணைந்து பணியாற்றலாம். ஆனால் மத மாற்ற நடவடிக்கைகளில் ஈடுபடவோ பொது இடங்களில் மதப் பிரச்சாரம் மேற்கொள்ளவோ இவர்களுக்கு அனுமதி இல்லை. சுற்றுலா விசாவில் வருபவர்கள் மதமாற்றம் மற்றும் மதப் பிரச்சாரத்தில் ஈடுபடுவது விதி மீறல்.

எனவே தாங்கள் செய்வது சட்ட விரோதமான காரியம் என்று தெரிந்தும் மிஷனரிகள் இத்தகைய செயல்களில் ஈடுபடுகின்றனர். இந்தியாவில் உள்ள தங்களது பிரதிநிதிகள் மூலம் இது வரை 1,03,328 பேருக்கு நற்செய்தி அறிவித்ததாகவும், 89,385 பேரை மதம் மாற்ற வாய்ப்பு இருப்பதாகவும், 35,183 பேர் தங்களுடன் இணைய உள்ளதாகவும், 29,286 பேரை முழுதாக மதம் மாற்றி உள்ளதாகவும், 65,334 பேருக்கு மதம் மாற்ற பயிற்சி அளித்துள்ளதாகவும் ஒரு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 60 குடும்பங்கள் கொண்ட ஒரு கிராமத்துக்கு உதவி புரிவது போல் கிறிஸ்தவ மதத்தைப் பரப்பி முழு கிராமத்தையும் மதம் மாற்றி விட்டதாக பெருமை பேசி இருக்கிறார்கள். இந்தியாவில் 2,286 பிரிவினரை கிறிஸ்தவம் இன்னும் சென்றடையவில்லை என்று வேதனைப்படும் International Mission Board அமைப்பு, பாப்டிஸ்ட்களின் உதவியுடன் 1,423 பிரிவினர் மத்தியில் மதப் பரப்புரை மேற்கொண்டுள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு அறிக்கையின் படி 9,911 புதிய சர்ச்சுகளைக் கட்டி இருப்பதாகக் கூறப்படுகிறது. மருத்துவ உதவி, கல்வி, வேலைவாய்ப்பு என்ற பெயரில் இயங்கும் தன்னார்வ அமைப்புகள் உண்மையில் மத மாற்றத்தில் ஈடுபடுகின்றன என்பதற்கு இந்த அமைப்பு ஒரு நல்ல உதாரணம். 

Similar News