தமிழகத்தை வஞ்சிக்கும் கேரளா- முதல்வர் ஸ்டாலின் அமைதி காப்பது ஏன் என்று பாஜக தலைவர் எஸ்.ஜி.சூர்யா கேள்வி!
தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பல நோயாளிகள் உயிரிழப்பதாக தொடர்ந்து செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.
புதிதாக பதவி ஏற்றுள்ள திமுக தலைவர் முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசு தமிழகத்துக்கு கூடுதலாக ஆக்சிஜன் ஏற்பாடு செய்து தர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதினார். இதையடுத்து மத்திய அரசு கேரளாவில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனில் ஒரு நாளுக்கு 40 மெட்ரிக் டன் வீதம் தமிழகத்துக்கு வழங்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டது.
இதைக் கண்டு "கேட்பார் கேட்டால் கிடைக்கும்" என்று குதித்துக் கொண்டு இருந்த உ.பிக்கள் கேரளா இந்த 40 மெட்ரிக் டன் ஆக்சிஜனை அனுப்ப மறுத்தபோது மூச்சு கூட விடவில்லை. உபிக்கள் அடுத்தவர்களின் சாதனையில் ஸ்டிக்கர் ஒட்டி தம்பட்டம் அடிப்பார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால் இப்போது கம்யூனிஸ்டுகளும் அந்த வரிசையில் சேர்ந்துள்ளனர்.
மதுரை நாடாளுமன்ற தொகுதி எம்பி சு.வெங்கடேசன் கேரளாவில் அண்மையில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைத்த கம்யூனிஸ்ட் முதல்வர் பினராயி விஜயனுக்கு கேரளாவில் அதிகப்படியாக இருக்கும் ஆக்சிஜனை தமிழகத்திற்கு அனுப்பி உதவி புரியுமாறு கடிதம் எழுதினார்.
மத்திய அரசின் உத்தரவை முழுதாக நிறைவேற்ற விட்டாலும் 31 மெட்ரிக் டன் ஆக்சிஜனை கேரள அரசு தமிழகத்துக்கு அனுப்பி வைத்தது. இதற்கு மத்திய அரசு தான் காரணம் என்ற போதும் எம்பி வெங்கடேசன் தான் எழுதிய கடிதத்தால் தான் ஆக்சிஜன் கிடைத்தது என்று ஒரு பக்கம் தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கிறார். மறுபக்கம் தமிழக முதல்வர் ஸ்டாலினோ தமிழகம் பலவிதங்களில் கேரளத்துக்கு உதவி வந்த போதும் அதை மறந்து தமிழகத்துக்கு ஆக்ஸிஜன் வழங்க மறுத்த கேரள அரசை என்னவென்றே கேட்கவில்லை.