"நான் யாரு தெரியுமா?" - பல் இளிக்கும் தமிழக நிதி அமைச்சரின் செயல்பாடுகள்
"பொறுப்பு" இந்த வார்த்தை மிக கனமானது. ஒரு சாமானியன் தான் செய்யும் செயல்களில் இந்த "பொறுப்பு" தெரிய வேண்டும், தான் பேசும் வார்த்தைகளில் "பொறுப்பு" பிரதிபலிக்க வேண்டும், தன் நடந்துகொள்ளும் விதத்தில் மனதில் உள்ள "பொறுப்பு" வெளிப்படையாக இருக்க வேண்டும். இப்படி ஒரு மனிதனின் வாழ்க்கையில் "பொறுப்பு" மிக மிக தவிர்க்க முடியாத ஒன்றாகும் இல்லாத பட்சத்தில் செய்யும் செயல்கள் அர்த்தமற்று போகும், பேசும் வார்த்தைகள் மதிப்பற்று போகும், நடந்துகொள்ளும் விதம் நாடகத்தனமாக விளங்கும். இப்படி சாதாரண மனிதனுக்கே "பொறுப்பு" இந்தளவிற்கு முக்கியம் என்றால் தமிழகம் போன்ற பெரிய மக்கள் தொகை கொண்ட மாநிலத்தின் மக்கள் நிதி நிலைமையை கண்காணித்து, கட்டுக்குள் வைத்திருக்க போகும் நிதி அமைச்சருக்கு "பொறுப்பு" எவ்வளவு முக்கியம்?
மக்களின் முன் பேசும் வார்த்தைகள், ஊடகங்கள் முன் பதில் சொல்லும் விதங்கள், மற்றவர்களின் கருத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பக்குவம், தன்நிலை ஏதுவாயினும் அதனை தாழ்த்திக்கொண்டு தனக்கிருக்கும் பணியை கருத்தில் கொண்டு செயல்படும் முதிர்ச்சி இப்படி இருக்க வேண்டிய தமிழகத்தின் நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் எப்படி நிஜத்தில் இருக்கிறார் என பார்த்தால் ஏமாற்றமே மிச்சும்!
"நான் நாட்டோட அமைச்சருங்க, யார் யாருக்கு பதில் சொல்லனும் என எனக்கு தெரியும்" என்கிற பதிலில் தெரியும் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனின் வீண் வீம்பு. கேள்வி எழுப்புபவருக்கு பதில் சொல்ல இயலவில்லை எனபதை தனக்கிருக்கும் பதவியை குறிப்பிட்டு தன் இயலாமயை பதவியால் போர்த்துகிறார் தமிழக நிதி அமைச்சர்.
"பாரம்பரிய குடும்பத்தில் இருந்து வந்தவன்" என்ற வசனத்தின் மூலம் தன் பாரம்பரிய குடும்பத்தின் நிலை இதுதான் என ஊரார் முன் வெளிச்சம் போட்டு காட்டி அசிங்கப்படுகிறார் பாரம்பரிய குடும்ப வாரிசு! "கெட்டாலும் மேன் மக்கள் மேன் மக்களே, சங்கு சுட்டாலும் வெண்மை தரும்" என்பது போல பாரம்பரிய குடும்ப வாரிசு என்பது பார்ப்பவர்கள் பார்வையில் இல்லை தான் நடத்தையில் இருக்கிறது என்பதை பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனின் "பாரம்பரிய குடும்ப" மூத்தோர்கள் ஒருவர் கூடவா சொல்லி வளர்க்கவில்லை இவரை? அல்லது "பாரம்பரிய குடும்ப" மூத்தார்களே மதிப்பில்லாமல் தான் வாழ்ந்தார்களா?