வைரஸ் தொற்றை நெருங்க விடாமல் தடுக்கும் நம் அன்றாட பயன்படுத்தும் பொருட்கள்.!

Update: 2021-06-13 00:45 GMT

சாதாரணமாக அன்றாடம் நம் வீட்டில் இருக்கும் பொருட்கள் எல்லாம் ஏதோ வாசத்திற்கோ சுவைக்கோ சமையலில் சேர்க்கப்படுவது அல்ல. எனவே நாம் சமையலில் பயன்படுத்தும் ஒவ்வொன்றுக்கும் ஒரு தனித்துவமான பண்பு உண்டு. அதை நாம் தவிர்க்காமல் நம் உணவில் சேர்த்துக்கொண்டால் தான் அதன் முழு நன்மையை நம்மால் பெற முடியும். அதுவும் இந்த தொற்றுநோய் காலத்தில், இவற்றை தவறாமல் எடுத்துக்கொள்வது அவசியம். அப்படி நீங்கள் இதுவரை கவனிக்காமல் இருந்தால் அது அதிக சக்தியைக் கொண்டுள்ள சமையலறைப் பொருட்கள்.


ஒவ்வொரு முறையும் பாட்டி வைத்திய முறைகள் முதல் ஆயுர்வேத மருத்துவ முறை வரை உடல்நலத்திற்கு மஞ்சள் நன்மைத் தரக்கூடியது என்பது மறுக்க முடியாத உண்மை. மஞ்சளில் குர்குமின் எனும் ஒரு பைட்டோ கெமிக்கல் உள்ளது, இது உங்கள் உடலில் இருந்து நச்சுகளை அகற்றவும், கிருமிகள் மற்றும் பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராட உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தவும் உதவும். உங்கள் உணவில் மஞ்சள் சேர்த்துக்கொள்ளலாம் அல்லது பாலுடன் சேர்த்து உட்கொள்ளலாம்.


காய்ச்சல் மற்றும் ஜலதோஷத்திற்கு இஞ்சி ஒரு சிறந்த தீர்வாக இருந்து வருகிறது. இது வைரஸ்களுக்கு எதிராக போராடும். இதில் ஜிஞ்சரால் உள்ளது. இது ஒரு ஆக்ஸிஜனேற்றியாகும். இது நமது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மற்றும் வைரஸ்களைக் கொல்லும். சுவாசக்குழாய் தொற்றுநோய்களைத் தடுப்பதில் இஞ்சி குறிப்பாக நல்லது. உங்கள் உணவில் இஞ்சியைச் சேர்த்துக்கொள்வது மிகவும் நல்லது. இஞ்சியைப் போலவே, பூண்டு கூட உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டுவதன் மூலம் கொரோனா வைரஸிலிருந்து பாதுகாப்பாக இருக்க உதவும். இதில் அல்லிசின் எனும் ஒரு தாவர கலவை உள்ளது. 

Similar News