இயேசு என்பவர் வரலாற்றில் வாழ்ந்தவரா?

Update: 2021-09-29 00:30 GMT

அறிஞர் பார்ட் எர்மானின் கருத்து என்ன?




 



இன்னைக்கு ஒரு இண்டிரஸ்டிங்கான விஷயத்தைப் பத்தி பார்க்கப்போறோம். அப்பாவி மக்கள்கிட்ட மதத்தை பரப்பும் கிருஸ்தவ மிஷனரிகள் என்ன சொல்றாங்கன்னா… பைபிள் மற்றும் பைபிள் கதைகள் நிஜமாக நடந்த சம்பவம், சுவிசேஷக் கதைகளில் சொல்லப்பட்டிருக்கும் இயேசு ஒரு வரலாற்று கதாப்பாத்திரம்… அப்படினு சொல்லி மதம் மாத்துறாங்க. ஆனால் பல முறை நாம சொல்லிட்டோம்… சுவிசேஷக் கதைகள் வரலாற்றில் நடந்த சம்பவம் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. அதேப்போல சுவிசேஷங்களில் சொல்லப்பட்டிருக்கும் இயேசு என்ற நபரும் வரலாற்றில் வாழ்ந்ததற்கு ஆதாரம் இல்லை.

இப்போ இதற்கு கிருஸ்தவ மிஷனரிகள் என்ன சொல்றாங்க அப்படின்னா… உலகப் புகழ் பெற்ற பைபிள் ஆராய்ச்சியாளரான 'பார்ட் எர்மான்' இயேசு என்பவர் வரலாற்றில் வாழ்ந்த மனிதர் என்பதை ஏற்றுக்கொண்டார். அதனால் சுவிசேஷங்களில் சொல்லப்பட்டிருக்கும் இயேசு என்பவர் வரலாற்றில் வாழ்ந்தவர் என்பதை யாராலும் மறுக்க முடியாது அப்படினு சொல்றாங்க.

சரி… முதல்ல பார்ட் எர்மான் என்பவர் யார்? அவர் உண்மையாலுமே அப்படி சொன்னாரா? என்பதை பார்ப்போம்.

பார்ட் எர்மான் ஏற்கனவே சொன்னது மாதிரி உலகப் புகழ்பெற்ற பைபிள் ஆராய்ச்சியாளர். தற்போது அவர் நார்த் கரோலினா பல்கலைக்கழகத்தில் 'இறையியல்' அதாவது ரிலீஜியஸ் ஸ்டடீஸ் துறையின் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் முன்னூறுக்கும் மேற்பட்ட கிரேக்க ஏடுகளை மதிப்பிட்ட 'புரூஸ் மெட்ஸ்கர்' என்பவருடைய மாணவர். இவருடைய குடும்பம் பாரம்பரியமான கிருஸ்தவ குடும்பம். அப்படிப்பட்ட குடும்பத்திலிருந்து வந்தததால பாதிரியார் ஆகவேண்டும் என்பது இவரோட ஆசை. அதற்காக கிருஸ்தவ மத ஆராய்ச்சிகளுக்காக அது சம்மந்தப்பட்ட கிரேக்க ஏடுகளை படிக்கப்படிக்க, ஒவ்வொறு ஏட்டிலும் காண்டிரடிக்‌ஷன்.

ஒரு ஏடு ஒரு கருத்து சொல்லுதுனு சொன்னால், அந்த கருத்துக்கு நேர் எதிர் கருத்தை இன்னொறு ஏடு சொல்லுது. இதை அவர் கவனித்தார். உதாரணத்திற்கு, இயேசுவினுடைய தந்தை யார்? இந்த கேள்வியை நாம பைபிள்கிட்ட கேட்டோம் அப்படின்னா, மத்தேயூ என்ன சொல்லுது தெரியுமா? இயேசு தந்தை பெத்லேஹேமை சேர்ந்த யாகோப்பின் மகன் ஜோசஃப் அப்படினு சொல்லுது.

லூக்கா என்ன சொல்லுதுன்னா, இயேசுவின் தந்தை நசரேத்தை சேர்ந்த, ஏலியின் மகன் ஜோசெஃப் அப்படினு சொல்லுது. அதாவது ஒரே பைபிள், இயேசுவினுடை அப்பா என்று சொல்லும் ஜோசெஃப்க்கு தந்தைகள் வேறு வேறு அப்படினு சொல்லுது. இது நம்ம கையில் இருக்கும் பைபிள்ல இருக்கு.

இந்த மாதிரியான ஏற்றுக்கொள்ள முடியாத முரண்பாடுகளை மூல கிரேக்க ஏடிலேயே இருக்கு… இதையெல்லாம் பார்ட் எர்மான் தன்னோட ஆராய்ச்சியில் கவனித்தார். ஆக, அவர் என்ன புரிந்துக்கொண்டார் என்றால் சுவிசேஷக் கதைகளில் உண்மை கிடையாது. அது வெவ்வேறு காலத்தில் வெவ்வேறு நபர்களால் மதத்தைப் பரப்புவதற்காக எழுதப்பட்டது என்று புரிந்துக்கொண்டார். அதுவரை தீவிர கிருஸ்தவராக இருந்த பார்ட் எர்மான், தன்னை ஆகனோஸ்டிகாக மாறினார். தற்போது தன்னை நாத்திகர் என்றே சொல்லிக்கொள்கிறார். அதுமட்டுமல்ல. பைபிள் ஆராய்ச்ச்சியாளரான தேவப்பிரியா என்பவர் பார்ட் எர்மானோடு அவருடைய வலைதளத்திலேயே உரையாடி இருக்கிறார். யார் வேண்டுமானாலும் பார்ட் எர்மானோடு பேசிவிட முடியாது. அவருடைய வலைதளத்தை பார்ப்பதற்கு கட்டணம் செலுத்தவேண்டும். ஆனால் சில ஆராய்ச்சியாளர்களுக்கு மட்டும் அவர் இலவசமாகவே குறிப்பிட்ட காலத்திற்கு வலைதளத்தை அனுக அனுமதிப்பார். அப்படி பைபிள் ஆராய்ச்சியாளர் தேவப்பிரியா என்பவருக்கு அனுமதி கிடைத்தது.

அப்போ நடந்த கான்வர்சேஷனில், சுவிசேஷக் கதைகளுக்கு வரலாற்று ஆதாரமே கிடையாது என்று நேரடியாகவே அவர் தேவப்பிரியாவிடம் தெரிவித்தார்.

அதாவது ஜோசிஃபஸ் என்பவரின் குறிப்புகளின்படி அந்தக் காலத்தில் 19 பேர் இயேசு என்ற பெயரோடு வாந்தார்கள் அப்படினு தெரியுது. நம்ம ஊரில் ராமசாமி, பெரியசாமி மாதிரி அந்த ஊரியில் இயேசு என்பதும் பொதுவான பெயர்தான். அதுல நம்முடைய தேடல் என்பது அதிசியங்கள் செய்த, செத்த பிறகு இறந்த உடலுடன் திரும்பி வந்ததாக சுவிசேஷக் கதைகள் சொல்லும் இயேசுவைப் பற்றியதுதான். இதுதான் பின்னாட்களில் புனையப்பட்டதாக பார்ட் எர்மான் அவர்களே சொல்லிவிட்டார்.

Tags:    

Similar News