கட்டாய மதமாற்றத்தை ஊக்குவிக்கும் இஸ்லாம் மிஷனரிகள்- நடவடிக்கை எடுக்கப்படுமா என பொதுமக்கள் கேள்வி !

Update: 2021-10-01 00:00 GMT

நாட்டில் கட்டாய மதமாற்றத்தை ஊக்குவிக்கும் மிஷனரிகள் உள்ளன. ஆனால் ஒரு ஐ.எ.எஸ் அதிகாரி மிஷனரிகளுக்கு ஆதரவு அளித்து இஸ்லாமுக்கு மதமாற்றம் செய்ய சொல்லும் நிகழ்வு உத்ரபிரதேசத்தில் நடந்துள்ளது.

உத்ரபிரேதசத்தின் சாலை மற்றும்போக்குவரத்து கழகத்தின் தலைவராக இருப்பவர் முகமது இஃப்காருதீன் இவர் தனது இல்லத்தில் இஸ்லாம் மிஷன்ரிக்கு அடைகலம் கொடுத்து சொற்பொழிவு ஆற்றினார். அதில் பஞ்சாப்பில் எப்படி ஒருவர் மதம் மாறினார் என்பதை விவரித்து உலகமெங்கும் இஸ்லாத்தை  பரப்ப வேண்டும் எனவும் அவர் கேட்கிறார்.

இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகியது.இதனை அடுத்து மத் மந்திர் துணை தலைவர் காவல்நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தார். இந்நிலையில், அம்மாநில முதல்வர் யோகிஆதித்யநாத் இதுகுறித்து தெளிவான அறிக்கையை கேட்டுள்ளனர்.

மேலும், முகமது இஃப்காருதீன் அரபு நாடுகளில் மட்டும் அல்லாவின் சாம்ராஜ்யம், உலகமெங்கிலும் இஸ்லாத்தை கடத்த வேண்டியது நமது கடமை எனவும் தெரிவித்தார். அதுமட்டுமின்றி பஞ்சாப்பை சேர்ந்த ஒருவர் இஸ்லாமிற்கு வருவதற்கு இந்து மதத்தில் உள்ள இறுதி சடங்கு முறைகள் தான் காரணம் என கூறியுள்ளார் எனவும் கூறினார்.

இந்த பிரச்சனையில் சரியான விசாரணை வேண்டும் என வலதுசாரி அமைப்புகள் கோரிக்கைவிடுத்துள்ளனர். முன்னதாக சிவபெருமான் இஸ்லாத்தின் தீர்க்கதரிசி என இஸ்லாம் மத குருக்கள் கூறியுள்ளனர்.இதன் மூலம் இந்து தர்மத்தை சிதைத்து கட்டாய மதமாற்றத்தை இவர்கள் ஊக்குவிக்கிறீரார்களா என்ற கேள்வி எழுந்துள்ளனது. இந்நிலையில், அவர் பேச்சின் இடையே துணை ஜனாதிபதி ஒருவரிடம் நெருக்கம் காட்டுகிறார். நீங்களும் அது போன்று வர வேண்டும் எனில் இஸ்லாம் மிஷனரியாக மாறவேண்டும் என கூறுகிறார்.

அதுமட்டுமின்றி இஸ்லாம் மாணவர்களுக்கு ஐ.ஏ.எஸ் பயிற்சி அளிக்கும் ஜகாத் அமைப்பின் மீது பல்வேறு புகார்கள் வந்தன. குறிப்பாக மதவெறியை தூண்டுதல், இந்து பெண்களை குறிவைத்து லவ் ஜிகாத் போன்ற செயல்களில் ஈடுபடுதல் போன்றவை. இது குறித்து ஹிந்தி செய்தி நிறுவனம் ஒன்று நிகழ்ச்சி வெளியிட்டது அதற்கு கடுமையான எதிர்பு எழுத்து உச்ச நீதிமன்றம் ஒளிபரப்புக்கு தடை விதித்திருந்தது. இப்போதாவது இஃப்காருதீன் மற்றும் ஜகாத் அமைப்புகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமா என பலதரப்பில் இருந்து கேள்வி எழுந்துள்ளது.

HinduPost

Tags:    

Similar News