தேவாலையத்திற்கு செல்வதால் ஒருவரின் சாதி சான்றிதழை ரத்து செய்ய முடியாது ! - அதிரடி காட்டிய நீதிமன்றம் !

Update: 2021-10-08 03:05 GMT

பட்டியலினத்தை சேர்ந்த கணவர்  கிறிஸ்துவ மத வழிபாடுகளை பின்பற்றுவதால் அவரின் ஜாதி சான்றிதழை ரத்து செய்ய முடியாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

ராமநாதபுரத்தை சேர்ந்த முனீஸ்வரி என்பவர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார் அந்த மனுவில் அவர் கிறிஸ்துவ மத அடையாளங்களை பின்பற்றுவதால் அவரின் சாதி சான்றிதழை ரத்து செய்து உத்தரவிட்டார். இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என முனீஸ்வரி மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.

இதனை விசாரித்த நீதிமன்றம் அனுமானங்களின் அடிப்படையில் ஒருவர் மதமாறியதாக கருத முடியாது என கூறியிருக்கிறது. மேலும், அவர் மதமாறியதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்பதால் அவர் பட்டியலினத்தை சாரந்தவராகவே கருதப்படுவார் என தீர்பளித்துள்ளது.

இதில் குறிப்பிடதக்க வேண்டிய விஷயம் என்னவெனில் ஒடுக்கப்பட்ட சமூதாயத்தை சார்ந்தவர்களின் நன்மைகாக மத்திய அரசு பல திட்டங்களை வகுத்துள்ளது. இதில் இந்து,சீக்கியர், புத்தமததை பின்பற்றுபவர்கள் மட்டுமே பட்டியலின சாதிகளில் அடங்குவர் எனவும் மதமாறியவர்கள் பட்டியல் இன மக்களுக்கு கிடைக்கும் சலுகைளை பெற்றுகொள்ள முடியாது என மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது இந்த இடத்தில் நினைவு கூறத்தக்கது. 

Source:pIndia

Tags:    

Similar News