கடவுள் மறுப்பில் இருந்து கோவில் உழவாரப்பணிக்கு திரும்பும் தி.மு.க - இனி ஆன்மீக பாதை

Update: 2022-01-07 10:45 GMT

கடந்த தேர்தலில் தி.மு.க'விற்கு மரணபயத்தை காண்பித்த இந்துக்கள் வாக்கு வங்கியை தக்க வைக்க இந்து சமய அறநிலையத்துறையில் உயர்நிலை அலோசனைக் குழு அமைத்து அதற்கு ஸ்டாலினே தலைவராக பொறுப்பேற்கிறார்.



பத்து ஆண்டுகளாக எதிர்கட்சி வரிசையில் இருந்த தி.மு.க'விற்கு மீண்டும் அரியணையில் ஏற பெரும் இடைஞ்சலாக இருந்தது கடந்த தேர்தலில் "இந்துக்கள் வாக்கு வங்கி", தேர்தல் பிரச்சாரத்தின் இறுதிகட்டத்தில் எல்லாம் நம்மை அவ்வளவு சுலபமாக வென்றுவிட விடமாட்டார்கள் என தி.மு.க தலைவர் ஸ்டாலினே மேடையில் புலம்பும் அளவிற்கு தி.மு.க'விற்கு மரணபயத்தை காட்டியது 'இந்துக்கள் வாக்கு வங்கி'. ஆகையினால் தான் தி.மு.க ஆட்சி பொறுப்பை ஏற்ற உடன் "நாங்கள் இந்துக்களுக்கு எதிரி இல்லை" என மக்களிடத்தில் காண்பித்து பெயர் வாங்க இந்து சமய அறநிலையத்துறையை தனி கவனத்துடன் கையாள துவங்கியது முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசு. கோவில் நிலங்கள் மீட்பு, வாடகை பாக்கி வசூலிப்புகள், ஆலய நிர்வாகம் என அதிக அக்கறை காண்பித்து இந்துக்கள் மீது அதீத அக்கறை கொண்டது போல் தி.மு.க காண்பிக்க முயற்சித்து வருகிறது. இதன் நீட்சியாக தற்பொழுது இந்து சமய அறநிலையத்துறையில் உயர்நிலை ஆலோசனைக்குழு அமைத்துள்ளார் முதல்வர் ஸ்டாலின் இதற்கு இன்று அரசாணை விதித்துள்ளது தமிழக அரசு.



இந்த குழு மூலம் இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் வரும் கோவில்களை சிறப்மாக மேம்படுத்தவும், கோவில்கள் பராமரிப்பை செம்மைபடுத்தவும் இந்த குழு செயல்படும், இதற்கு முதல்வர் ஸ்டாலின் தலைமை தாங்குவார்.


இதற்கு அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு துணை தலைவராக இருப்பார். அதாவது கடவுளே இல்லை என பரப்புரை செய்து வளர்ந்த கட்சியின் வரலாற்று பின்புலத்தை கொண்ட தி.மு.க'வின் தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் இந்து சமய அறநிலையத்துறை கோவில்களை செம்மைப்படுத்தும் குழுவின் தலைவர்.



இந்துக்கள் வாக்கு வங்கி இன்றைக்கு தி.மு.க'வை கோவில் உழவாரப்பணி செய்யும் அளவிற்கு மாற்றியுள்ளது.

Similar News