பத்தாயிரத்தை தாண்டிய கொரோனோ - ஸ்டிக்கர் ஒட்டுவதில் பிஸியான தி.மு.க அரசு!

Update: 2022-01-09 06:15 GMT

தமிழகத்தில் கொரோனோ பாதிப்பு பத்தாயிரத்தை கடந்து எகிறிகொண்டிருக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய தி.மு.க அரசோ ஸ்டிக்கர் ஒட்டுவதில் பிஸியாக உள்ளது.


தற்பொழுது கொரோனோ மூன்றாம் அலை தமிழகத்தில் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. முதல் இரண்டு அலைகளில் கொரோனோ தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கையை விட மூன்றாம் அலையான இந்த அலையில் கொரோனோ தொற்று எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே வருகிறது. உதாரணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமையின் போது (2/01/22) 1594 என இருந்த கொரோனோ தொற்றாளர்களின் எண்ணிக்கை நேற்று சனிக்கிழமை (8/01/22) 10978 ஆக உயர்ந்துள்ளது.

அதாவது 7 நாட்களில் பத்து மடங்கு கொரோனோ தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் ஆளும் தி.மு.க அரசு மத்திய அரசு திட்டங்களுக்கு தி.மு.க பெயர் சூட்டுவதிலும், முதல்வர் சைக்கிளில் சென்று விளம்பரம் செய்வதிலும், கடந்த அ.தி.மு.க ஆட்சியில் வாங்கிய நற்பெயருக்கெல்லாம் தி.மு.க ஸ்டிக்கர் ஒட்டுவதில் பரபரப்பாக உள்ளது.



தற்பொழுது ஆளும்கட்சியாக உள்ள தி.மு.க கடந்த கொரோனோ இரண்டு அலைகளின் போதும் எதிர்கட்சியாக இருந்து அரசிற்கு அப்படி செய்யலாம், இப்படி செய்யலாம் என பல யோசனைகளை கூறினர். தற்பொழுது ஆளும் அரசாக இருக்கும்போது கொரோனோ பரவலை கண்டுகொள்ளாமல் ஸ்டாலினை முதன்மைபடுத்தி விளம்பரம் செய்தவதில் பிஸியாக செயல்பட்டு கொண்டிருக்கிறது.



மக்களை காக்க வேண்டிய அரசு கட்சியை விளம்பரப்படுத்தல், முதல்வரை சூப்பர் ஹீரோ மாதிரி சித்தரித்தல் என இயங்குவதை மக்கள் பார்த்து கொண்டிருக்கிறார்கள்.

Similar News