ஒருபுறம் சிபிஐ விசாரணைக்கு முட்டுக்கட்டை மறுபுறம் சகாயமேரிக்கு தி.மு.க வரவேற்பு - யாரைக் காப்பாற்ற தி.மு.க துடிக்கிறது

Update: 2022-02-14 12:30 GMT

தஞ்சை சிறுமி தற்கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சகாயம்மேரி'க்கு தி.மு.க எம்.எல்.ஏ இனிகோ இருதயராஜ் ஒருபுறம் வரவேற்பு அளிக்க மறுபுறம் நீதிமன்றத்தில் சி.பி.ஐ விசாரணைக்கு முட்டுக்கட்டை போட தி.மு.க முயல்கிறது! இவை அனைத்தையும் வைத்துப் பார்க்கும் பொழுது யாரை காப்பாற்ற தி.மு.க இந்த பாடுபடுகிறது? என சந்தேகம் எழுந்துள்ளது.



கடந்த ஜனவரி மாதம் தஞ்சை திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள மைக்கேல் பட்டியில் தூய இருதய மேல்நிலை பள்ளியில் படித்த 17 வயது பள்ளி மாணவி மதமாற்ற கொடுமையால் தற்கொலை செய்து கொண்டார் இந்த விவகாரத்தை தி.மு.க அரசு மூடிமறைக்க பார்த்த வேளையில் அண்ணாமலை தலைமையிலான பா.ஜ.க கையிலெடுத்து வீதியில் இறங்கி போராடியது இதன் பயனாக இந்த சிறுமியின் மரணம் தேசிய கவனம் குவித்தது.


அதன் விளைவாக இந்த சிறுமியின் மரணத்தை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது, ஆனால் ஆரம்பம் முதலே இந்த வழக்கை மதமாற்றப் கோணத்திலிருந்து பார்க்க தி.மு.க தயங்கியது மேலும் இந்த வழக்கு சி.பி.ஐ'க்கு செல்லக் கூடாது எனவும் குறியாக இருந்தது அதன் தொடர்பாகவே நீதிமன்றத்தில் இந்த வழக்கை சி.பி.ஐ'க்கு செல்ல அனுமதிக்காமல் தி.மு.க முட்டுக்கட்டை போட்டது.


ஒருபுறம் நீதிமன்றத்தில் சி.பி.ஐ விசாரணைக்கு முட்டுக்கட்டை போட்ட தி.மு.க மறுபுறம் இறந்த சிறுமியின் தற்கொலைக்குக் காரணமான சகாயமேரியையை தி.மு.க எம்.எல்.ஏ இனிகோ இருதயராஜ் சிறையில் சென்று பார்த்து வந்துள்ளார், இது மட்டுமல்லாது இன்று முதல்வர் ஸ்டாலின் வீட்டின் அருகே போராடத் துவங்கிய ஏ.பி.வி.பி நிர்வாகிகளை தி.மு.க அரசின் காவல்துறை வலுக்கட்டாயமாக கைது செய்தது. இந்த செயலை எல்லாம் வைத்துப் பார்க்கும் பொழுது மதமாற்று விவகாரத்தை இந்த வழக்கில் இருந்து தி.மு.க அப்புறப்படுத்த முயல்கிறது எனவும் கிறிஸ்துவ பள்ளியையும் அதன் பின் உள்ள கிறிஸ்துவ அமைப்புகளையும் காப்பாற்றவே இந்த ஸ்டாலின் அரசு துடிக்கிறது எனவும் தெரிகிறது.

Similar News