திருச்சி திருவெறும்பூர் ஒன்றியத்தில் மக்களை ஈர்க்கும் பா.ஜ.க வேட்பாளர் ராஜகுமாரி பாலச்சந்தர்

Update: 2022-02-18 09:15 GMT

திருச்சியில் திருவெரும்பூர் ஒன்றியம் கூத்தைப்பார் பேரூராட்சியில் கவனம் இருக்கும் பா.ஜ.க வேட்பாளர்கள்.


நாளை நடைபெறவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தமிழகமெங்கும் பா.ஜ.க தனித்து போட்டியிடுகிறது. இதில் பல இடங்களில் குறிப்பிடத்தக்க வேட்பாளர்கள் தங்களது தனித்துவமான பிரச்சாரம் மூலமும் மக்களை ஏற்கனவே ஆண்ட கட்சிகள் எந்த அளவிற்கு கடமைகள் செய்யாமல் ஏமாற்றி வந்தனர் என எடுத்துக்கூறி வாக்குகளை சேகரித்து வருகின்றனர். அவ்வாறு திருச்சி மாநகரில் போட்டியிடும் வேட்பாளர்களில் குறிப்பிடத்தக்க சிலர் கவனம் ஈர்த்து வருகின்றனர்.




 


அந்தவகையில் திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருவெறும்பூர் ஒன்றியம் கூத்தைப்பார் பேரூராட்சி பா.ஜ.க வேட்பாளர் பி.ராஜகுமாரி பாலச்சந்தர் இவர் தம்மை எதிர்த்து போட்டியிடும் தி.மு.க மற்றும் அ.தி.மு.க வேட்பாளர்களை விட மக்களிடத்தில் பெரும் செல்வாக்கை பெற்றுளளார், 35 வயதான இவர் அந்தப் பகுதியில் ஏற்கனவே போட்டியிட்டு வெற்றி பெற்ற வேட்பாளர்கள் செய்யத் தவறிய விஷயங்களை மக்களிடத்தில் எடுத்துக்கூறி நான் இந்தப் பதவிக்கு வந்தால் என்ன செய்வேன் என்பதையும் கூறி சிறப்பான முறையில் வீடு வீடாக சென்று ஒவ்வொருத்தரையும் தனித்தனியாக சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறார்.




 


குறிப்பாக அவர் கூறும் வாக்குறுதிகள் மக்களை ஈர்ப்பதாக உள்ளது, இத்தனை நாளாக இருந்து வந்த பராமரிப்பில்லாத சாலைகளை அகற்றி சரியான முறையில் சாலை வசதி செய்து தருவேன் எனவும், குடிநீர் வசதி சரியாக செய்யப்படாததால் மத்திய அரசின் திட்டத்தின்கீழ் அங்கு குடிநீர் வசதி ஏற்படுத்தி தர பாடுபடுவேன் என்றும், பிரதமர் மோடியின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் அங்கு கழிப்பறை வசதி இல்லாமல் அவதிப்படும மகளிர் மற்றும் குழந்தைகளுக்கு சரியான கழிப்பறை வசதி அமைத்து தருவேன் எனவும் வாக்குறுதி அளித்து கவனத்தை ஈர்த்து வருகிறார்.




 


மேலும் முறையான சாக்கடை வசதி இல்லாததால் பரவும் தொற்று நோயை அனுபவபூர்வமாக உணர்ந்த அவர் சாக்கடை வசதி நல்ல முறையில் செய்து தருவேன் அதுமட்டுமின்றி தொழில் முனைவோர் மற்றும் வேலை வாய்ப்பு தேடும் இளைஞர்களுக்கு பிரதமர் மோடியின் மத்திய அரசு திட்டத்தால் தொழில் முனைவோர்களாகவும் பட்டதாரிகளை வேலை வாய்ப்பு உள்ளவர்களாகவும் மாற்றுவேன் என மக்களை வாக்குறுதி கொடுத்து வருகிறார் திராவிட கட்சிகள் மத்தியில் இவரின் அணுகுமுறை மக்களை ஈர்த்துள்ளது.

Similar News