திருவெறும்பூர், கூத்தைப்பார் பேரூராட்சியில் தெறிக்கவிடும் பா.ஜ.க வேட்பாளர் தினேஷ்

Update: 2022-02-18 09:30 GMT

திருச்சி திருவெறும்பூர் பகுதி கூத்தைப்பார் பேரூராட்சியில் வார்டு என் 18'ல் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர் தினேஷின் மக்கள் தேவை அறிந்த வாக்குறுதிகளால் வாக்காளர்களை பெரிதும் கவர்ந்து வருகிறார்.


கடந்த சட்டமன்றத் தேர்தல் வரை அ.தி.மு.க'வுடன் கூட்டணியில் தேர்தலை சந்தித்த பா.ஜ.க தற்போது நடைபெறவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அண்ணாமலை தலைமையில் தனித்து தமிழகத்தில் போட்டியிடுகிறது பல கருத்துக் கணிப்புகளும் களநிலவரங்களை தமிழகத்தில் பா.ஜ.க பெரும் வாக்குகளால் கண்டிப்பாக முதல் மூன்று இடங்களில் ஒரு இடத்தை பிடித்தே தீரும் என கட்டியம் கூறுகின்றன, அந்த வகையில் பா.ஜ.க'வின் வேட்பாளர்களும் தேனீ போல் சுறுசுறுப்பாக இயங்கி வருகின்றனர்.


அப்படித் தேனீ போல் சுறுசுறுப்பான பா.ஜ.க வேட்பாளர் தினேஷ் திருவெறும்பூர் ஒன்றியம் கூத்தப்பர் பேரூராட்சியில் வாக்காளர்களை பெரிதும் கவர்ந்து வருகிறார். வார்டு என் 18'ல் போட்டியிடும் இவர் அ.தி.மு.க மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிடுகிறார். மேலும் இந்த பகுதியில் நாள்பட்ட பிரச்சனைகளை அறிந்து அதன் மூலம வாக்குறுதிகளை அளித்து வாக்காளர்களை கவர்வது மாற்று கட்சி வேட்பாளர்களையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.


அந்தப் 18'வது வார்டில் குப்பைகளை சரிவர அகற்றுவது எனவம் வார நாட்களில் வி.ஏ.ஓ மற்றும் ஆர்.ஐ அலுவலகங்கள் சரியாக செயல்படாததே அப்பகுதி மக்களின் நீண்ட நாட்கள் கோரிக்கை எனவே அவற்றை வாக்குறுதிகளாக மாற்றி அந்த பகுதியில் குப்பைகளை தொடர்ச்சியாக அகற்றுவேன் எனவும் வார நாட்களில் மற்றும் ஆர்.ஐ மற்றும் வி.ஏ.ஓ அலுவலகம் தொடர்ந்து செயல்பட வைத்து அங்குள்ள மக்களின் அரசு தொடர்பான ஆவணங்கள் பிரச்சினையை தீர்ப்பேன் எனவும் வாக்குறுதி அளித்துள்ளார்.


மேலும் தெரு விளக்குகளை அதிகப்படுத்துவது இரவில் தனியாக செல்லும் பெண்கள் அதனால் பயமின்றி நடந்து செல்ல பயன்படும் எனவும் தேவையற்ற மரங்களை அகற்றி ஏரியாவை நல்லமுறையில் சீர்செய்து பசுமையாக வைப்பேன் எனவும் உறுதி அளித்துள்ளது வாக்காளர்களை பெருமளவில் கவர்ந்துள்ளது. வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ள இந்த வேட்பாளரின் வெற்றி என்னவென்று அடுத்த வாரங்களில் தெரிந்துவிடும்.



Similar News