திருச்சி, கூத்தப்பர் பேரூராட்சியில் மாற்றுக் கட்சி வேட்பாளர்களுக்கு பயம் ஏற்படுத்தும் பா.ஜ.க வேட்பாளர் சுசீலா ஜீவானந்தம்

Update: 2022-02-18 09:30 GMT

தமிழகத்தின் மத்திய மண்டலம் திருச்சியில் திருவெறும்பூர் ஒன்றியத்தில் கூத்தைப்பார் பேரூராட்சியில் பா.ஜ.க வேட்பாளர்கள் தொடர்ச்சியாக கவனம் எடுத்து வருகின்றனர், அந்த வகையில் வார்டுஎண் 6 போட்டியிடும் சுசிலா ஜீவானந்தம் அனைவரின் கவனத்தையும் பெருமளவு ஈர்த்துள்ளார்.


பா.ஜ.க'வின் வளர்ச்சியாக இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அமையவிருக்கிறது, அண்ணாமலை தலைமையில் தமிழகத்தில் பா.ஜ.க'வின் செல்வாக்கு உயர துவங்கியது முதல் அதனை சுய பரிசோதனை செய்து கொள்ள முதல் முயற்சியாக பா.ஜ.க இந்த தேர்தலில் தனியாக களம் காண உள்ளது. இந்தத் தேர்தலில் வாங்கும் வாக்குகள் அனைத்தும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் எவ்வாறு உழைக்க வேண்டும் என்பதை குறிப்பிட்டுக் காட்டும் ஒரு தேர்தலாகும் பா.ஜ.க'விற்கு. அந்தவகையில் மின்னல் போன்ற பல வேட்பாளர்களும் களம் கண்டு பா.ஜ.க'வின் வெற்றிக்கு பெருமளவில் பாடுபட்டுவருகின்றனர்.

திருச்சிராப்பள்ளியில் திருவெறும்பூர் ஒன்றியத்தில் கூத்தைப்பார் வார்டு எண் 6 இல் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர் சுசீலா ஜீவானந்தம் என்பவரை எதிர்த்து போட்டியிடும் தி.மு.க, அ.தி.மு.க வேட்பாளர்களுக்கு சவாலான போட்டியாளராக இருந்து வருகிறார்.


மேலும் அப்பகுதியில் நீண்ட நாள் பிரச்சனை எனக் கருதப்படும் அனைத்தையும் தன்னால் மக்களுக்காக மாற்றித் தர முடியும் என உணர்ந்து அதை வாக்குறுதிகளாக மாற்றி வாக்கு சேகரித்து வருகிறார். குறிப்பாக குடிநீர் பிரச்சினையை சரி செய்தல், சிறுவர்களுக்கு விளையாட்டு மைதானத்தை மேம்படுத்துதல், இளம்பெண்கள் மற்றும் வயதானவர்கள் பாதுகாப்பிற்காக தெருவிளக்குகள் அமைத்து அதை சரியான முறையில் பராமரித்தல், பிரதமர் மோடியின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் அப்பகுதியில் குப்பைகளை சரிவர அகற்றி சுகாதாரமாக வைத்திருத்தல் என வாக்குறுதிகளால் அனைத்து வீட்டுப் பெண்களையும் கவர்கிறார்.


இதனால் அந்த பகுதியில் அவரின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது மாற்று கட்சி வேட்பாளர்களே வந்து அவரிடத்தில் சமரசம் பேசும் அளவிற்கு உள்ளது சுசிலா ஜீவானந்தம் அவர்களின் தேர்தல் பணி.

Similar News