அயோத்தியா மண்டப விவகாரம் - வானதி சீனிவாசனிடம் முதல்வர் சீற காரணம் யார் மீதுள்ள கோபம்?

Update: 2022-04-12 13:15 GMT

மேற்கு மாம்பலம் அயோத்தியா மண்டபம் விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியதற்கு முதல்வர் ஸ்டாலின் கோபமடைந்தார்.

மேற்கு மாம்பலத்தில் உள்ள அயோத்தியா பஜனை மடத்தை அறநிலையத்துறை கையகப்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க பொதுச்செயலாளர் கரு.நாகராஜன், 134 வார்டு பா.ஜ.க உறுப்பினர் உமா ஆனந்தன் மற்றும் இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டனர், இதனை தொடர்ந்து காவல்துறை அவர்களை வலுக்கட்டாயமாக தூக்கி சென்றது. இந்த விவகாரம் தொடர்பாக 75 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த விவகாரம் தொடர்பாக பா.ஜ க எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் இன்று சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பினார், அவரின் கேள்விக்கு முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது, "மக்கள் பிரச்சினையில் பா.ஜ.க கவனம் செலுத்த வேண்டும், மக்களுக்கு எது சாதகம் என்பதை புரிந்துகொண்டு செயல்பட வேண்டும் தேவையில்லாத அரசியலை புகுத்தி கட்சியை பலப்படுத்த நினைத்தால், அது நடக்கவே நடக்காது" என கூறினார்.

அதாவது அயோத்தியா மண்டபம் விவகாரமும் மக்கள் விவகாரம்தான், மேற்கு மாம்பலம் பகுதி வாழ் சில மக்களின் பிரச்சனை, அதை வானதி சீனிவாசன் சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பியதுதான் முதல்வருக்கு பிரச்சனை. மேலும் தனிநபருக்கு ஏற்படும் கஷ்டம் யூ ட்யூப், சமூக வலைத்தளங்களில் வெளியானால் உடனே அதற்கு நடவடிக்கை, நேரில் சென்று பார்ப்பது போன்ற செயல்களில் ஈடுபடும் முதல்வர் ஸ்டாலின் ஒரு குறிப்பிட்ட பகுதி மக்களின் சம்மந்தப்பட்ட விவகாரத்தை எதோ வேறு மாநிலத்தில் நடக்கும் விவகாரமாக நினைத்து சட்டப்பேரவையில் பேசியது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. மேலும் இதை வைத்து கட்சியை வளர்க்க வேண்டாம் என முதல்வர் ஸ்டாலின் கூறியது பா.ஜ.க வளர்வது முதல்வர் உள்ளிட்ட தி.மு.க'வினரின் தூக்கத்தை கண்டிப்பாக கெடுக்கிறது போன்றே தெரிகிறது.

Similar News