நியாயவிலைக் கடையில் பிரதமர் மோடியின் படத்தை மாட்டிய அண்ணாமலை - இனி இப்படிதான் என மறைமுகமாக கூறுகிறாரா?

Update: 2022-04-14 09:07 GMT

கோவையில் நியாயவிலைக் கடையில் பிரதமர் மோடியின் படத்தை அண்ணாமலை மாட்டிய விவகாரம் தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்பத்தியுள்ளது.


சமீபத்தில் தஞ்சாவூர் மாவட்டம் வேப்பத்தூர் பேரூராட்சி அலுவலகத்தில் பாரதிய ஜனதா கட்சியின் கவுன்சிலர் பிரதமர் மோடியின் படத்தை அலுவலகத்தில் மாட்டினார், அப்போது அங்கு இருந்த மாற்று கட்சியை சேர்ந்த நபர் பிரதமர் மோடியின் படத்தை அங்கிருந்து அகற்றச் சொல்லி மிரட்டி அகற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. பிரதமர் மோடியின் படத்தை ஒரு அரசு அலுவலகத்தில் இருந்து மாற்று கட்சியினர் மிரட்டி நீக்கச் சொன்ன விவகாரம் பா.ஜ.க'வினர் மட்டுமல்லாது மோடியின் ஆதரவாளர்களை கொந்தளிக்க வைத்தது.


இந்நிலையில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நேற்று கோவைக்கு வருகை புரிந்தார் அப்பொழுது அவர் அவிநாசி சாலையில் கோல்ட்மின்ஸ், துரைசாமி நகர் பகுதியில் உள்ள நியாயவிலை கடைக்கு சென்றார். அங்கு சென்ற அவர் மத்திய அரசு நியாய விலை கடையில் மத்திய அரசு வழங்கி வரும் இலவச அரிசி குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.



பின்னர் அவர் நியாய விலை கடை உள்ளே சென்று முதல்வர் ஸ்டாலின் படத்திற்கு அருகே பிரதமர் நரேந்திர மோடியின் படத்தை மாட்டினார், நியாயவிலைக் கடைகளில் வழங்கப்படும் திட்டங்கள் பெரும்பாலும் மத்திய அரசு திட்டங்கள் ஆகவே இருக்கிறது ஆனால் அது தமிழக அரசின் திட்டம் போல் தமிழகத்தில் மக்களிடையே தவறான பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது இதனை மாற்றுவதற்காகவே பிரதமர் மோடியின் படத்தை நியாயவிலைக் கடையில் அண்ணாமலை மாட்டினார் என பா.ஜ.க தரப்பு தெரிவிக்கிறது.


சில தினங்களுக்கு முன்பு பேரூராட்சி அலுவலகத்தில் பிரதமர் மோடியின் படத்தை மாற்று கட்சியினர் அகற்றச் சொல்லி மிரட்டிய நிலையில் நேற்று பிரதமரின் படத்தை நியாயவிலைக் கடையில் மாட்டி அண்ணாமலை மாற்று கட்சியினருக்கு மறைமுக செய்தி சொல்லியதாக தெரிகிறது, இதனை அடுத்து தமிழகத்தின் பல இடங்களில் நியாய விலை கடையில் பிரதமர் மோடியின் படம் இடம்பெறும் எனவும் அறியமுடிகிறது.



Image Source - Junior Vikatan

Tags:    

Similar News