"செய்தித்தாள் போல நடந்துகொள்ளவும் 'டாய்லெட் பேப்பர்' போல அல்ல" - கருணாநிதி நிறுவிய முரசொலிக்கு வகுப்பெடுத்த அண்ணாமலை
செய்தித்தாள் போல நடந்துகொள்ளுங்கள், 'டாய்லெட் பேப்பர்' போல தரமிழந்து திரித்து வெளியிட வேண்டாம்" என்கிற ரீதியில் பா.ஜ.க'வின் தமிழக தலைவர் அண்ணாமலை தி.மு.க'வின் அதிகாரபூர்வ நாளேடான 'முரசொலி'யை விமர்சித்துள்ளார்.
தி.மு.க'வின் அதிகாரபூர்வ செய்தித்தாள் முரசொலி, மறைந்த தி.மு.க தலைவர் மு.கருணாநிதி நிறுவிய பத்திரிகை. தி.மு.க'வின் அதிகாரபூர்வ செய்திகள், கட்சி நிர்வாகிகள் பதவி அறிவிப்பு, நீக்கம், பதவி மாற்றம், அரசு பதவியில் இருக்கும் முதல்வர், அமைச்சர்கள் போன்றவர்களின் நிகழ்ச்சிகள் ஆகியவற்றை அதிகாரப்பூர்வமாக தி.மு.க'வினருக்கு அறிவிப்பது முரசொலியே! தி.மு.க கட்சியினர் இதன் வழியாகத்தான் கட்சியின் நிகழ்வுகளை அறிந்து கொள்வர்.
அப்படிப்பட்ட முரசொலி நாளிதழ் இன்று தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை குறித்த செய்தி ஒன்றை வெளியிட்டது, அதில் அண்ணாமலை கூறிய வாசகமான, "1959'ம் ஆண்டு நம்பூதிரிபாட் ஆட்சியை கலைத்தவர்கள் யார் தெரியுமா? இந்திரா காந்தி அம்மையார் கலைத்தார்கள், நாம் கலைத்தோமா?" என அண்ணாமலை கேட்டதை குறிப்பிட்டு, அதற்கு கருத்து சொல்லுகிறேன் என்ற பெயரில், "1959'இல் பிரதமராக இருந்தவர் யார் என தெரியாதவர்கள் எல்லாம் தங்களை ஐ.பி.எஸ் என கூறிக்கொண்டு, ஒரு அரசியல் கட்சியின் தலைவராக இருக்கின்றனர்" என முரசொலியில் எழுதியிருந்தனர்.
இதற்கு தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அவர்கள் தனது ட்விட்டர் பதிவில் பதிலளித்துள்ளார். அவர் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது, "தமிழில் தினசரி நாளிதழ் என்று தன்னைத்தானே அழைத்துக் கொள்ளும் 'டாய்லெட் பேப்பர்' தகுதியான செய்தித்தாள் தமிழகத்தில் முரசொலி என்று அழைக்கப்படுகிறது.
இது தி.மு.க'வின் அதிகாரப்பூர்வ செய்தித்தாள். கேரளாவில் ஈ.எம்.எஸ் நம்பூத்ரிபாட் அரசு ஏன் டிஸ்மிஸ் செய்யப்பட்டது என்பதற்கான எனது வீடியோவையும் நான் பேசியதற்கான ஆதாரத்தையும் தயவுசெய்து பார்க்கவும்" என அண்ணாமலை பேசியிருந்த வீடியோ'வையும் இணைத்து பதிவிட்டிருந்தார்.