குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்மு - யார் இவர்? பின்னணி என்ன?

Update: 2022-06-22 08:42 GMT

தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனை முறைப்படி பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அறிவித்தார். இவரது அறிவிப்புக்கு அனைவரும் பாராட்டியுள்ளனர்.

இதற்கிடையில் கடந்த 1997ம் ஆண்டில் முழுநேர அரசியலுக்காக தமது அரசுப் பணியை திரொபதி முர்மு துறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் நிர்வாகத்திறனும், செயல்திறனும் மிக்கவாராக உள்ளார்.

இதன் பின்னர் பா.ஜ.க.வில் இணைந்த அவர் ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆளுநராக முழுமையான பதவிக்காலம் வகித்தவர். இவர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பழங்குடியினத்தவரான ஒரு பெண்ணாக முதன்முறையாக ஆளுநராக பதவி வகித்தார். தற்போது இவர் இந்திய நாட்டின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மேலும், தனது கணவர் மற்றும் இரண்டு மகன்களையும் பறிகொடுத்துவிட்டு சொந்த வாழ்க்கையின் சோகத்திலும் துவண்டுவிடாமல் தொடர்ந்து போராடி தனது வாழ்க்கையை முன்னேற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் பழங்குடியின பெண்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து போராடியுள்ளார். எனவே இவர் குடியரசுத் தலைவர் வேட்பாளருக்கான முழுத்தகுதியையும் படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source, Image Courtesy: Polimer

Tags:    

Similar News