ஆங்கிலேய ஆட்சியை மிக கடுமையாக எதிர்த்த சுப்ரமணிய சிவா நினைவு தினத்தில் அவரை பற்றி காண்போம்!
பாரத அன்னையின் தவப்புதல்வரான சுப்ரமணிய சிவா தியாகத்தின் மறு உருவம் என்றால் அது மிகையல்ல. அன்றைய ஆங்கிலேய ஆட்சியின் அடக்குமுறையை எதிர்த்து தென்னகத்தில் தேசபக்தியை ஊட்டிய மும்மூர்த்திகளில் ஒருவரான சிவம், மகாகவி பாரதியாரால் ''வீரமுரசு'' என்று புகழப்பட்டவர்.
தமிழகத்தின் தென் பகுதியில் உள்ள வத்தலக்குண்டு என்ற ஊரில் 4.10.1884ம் ஆண்டு ராஜம் ஐயர் நாகலட்சுமி அம்மாள் தம்பதியர்க்கு மகனாக பிறந்தார். அவருடைய இளமை காலம் முழுவதும் வருமையிலேயே சென்றது. பள்ளிப் படிப்பு மதுரை, கோவை மற்றும் கேரள மாநிலம் திருவனந்தபுரம் உள்ளிட்ட நகரங்களில் முடித்தார். அந்த காலக்கட்டத்தில் இவரது தேச பக்தி அம்பத் தொடங்கியது.
கடந்த 1899ம் ஆண்டு இவருக்கும், மீனாட்சியம்மாள் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. இல்லற வாழ்க்கையில் நுழைந்தாலும் தேச சேவையிலிருந்து நொடிப் பொழுதுகூட விலகவில்லை. அதன்படி கடந்த 1906ம் ஆண்டு திருவனந்தபுரத்தில் ஆரிய சமாஜத்தில் தன்னை இணைத்து கொண்டு பல சொற்பொழிவுகளை கேட்க சுப்பிரமணிய சிவாவின் தேசபக்தி சுடர் அனலாய் எரியத் தொடங்கியது. இதனின் நோக்கமே இளைஞர்களின் மனதில் தேசபக்தியை உருவாக்கி சுதந்திர உணர்வை தூண்டுவே நோக்கமாகும்.
இதனால் திருவாங்கூர் சமஸ்தானம் சிவாவை திருவாங்கூர் சமஸ்தானத்தில் இருந்து உடனே வெளியேற உத்தரவிட்டது. இதன் பின்னர் இவர் ஊர், ஊராகச் சென்று ஆங்கில அரசுக்கெதிராக பிரச்சாரத்தை முன்னெடுத்து வந்தார். இதனால் கைது செய்யப்பட்ட சுப்ரமணிய சிவா சென்னை சிறையில் அடைக்கப்பட்டார். இதன் பின்னர் 1912ம் ஆண்டு விடுதலை அடைந்த அவர், விடுதலையானார். அதன் பின்னர் அங்கேயே குடிபெயர்ந்தாலும் சென்னை வாழ்க்கை மிகவும் நெருக்கடியிலேயே கழிந்தது.